177. அன்பாக
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் முலைதானும்
கொந்தேமி குந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற குழலாரைக்
கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
குன்றாம லைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தாமி குந்த
வம்பார்க டம்பை அணிவோனே
வந்தேப ணிந்து நின்றார்ப வங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா
சென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய்வ ளர்ந்த
செங்கோட மர்ந்த பெருமாளே
-177 - திருச்செங்கோடு
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் முலைதானும்
கொந்தேமி குந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற குழலாரைக்
கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
குன்றாம லைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தாமி குந்த
வம்பார்க டம்பை அணிவோனே
வந்தேப ணிந்து நின்றார்ப வங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா
சென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய்வ ளர்ந்த
செங்கோட மர்ந்த பெருமாளே
-177 - திருச்செங்கோடு
.
குகஸ்ரீ ரசபதி விரிவுரை
சுருக்க உரை
நான் ஐம்புலன்களும் ஒருமைப்பட்டு, உன்னை நினையாமல், விடம் நிறைந்த கண்களும், தாமரை மொட்டு போன்ற கொங்கைகளும் உடைய பொது மகளிரை நினைந்து, மனம் குலைந்து அலைச்சல் உறுவேனோ கூத்தப் பெருமான் அருளிய குமரனே. உன்னை வணங்கும்
அடியார்களுடைய பிறவித் துன்பங்களைத் தொலைக்கும் கூரிய வேலை ஏந்தியவனே. நான் செல்லும் இடங்களிலெல்லாம் கந்தா என்று அழைத்த போது உன் செஞ் சேவலுடன் என் முன் வரவேண்டும். நெல்லும் தாமரையும் ஒன்றாக வளரும் திருச்செங்கோட்டில் வீற்றிருப்பவனே, நான் விலை மாதர் இன்பத்தில் மனம் அலைச்சல் உறுவேனோ?.
ஐம்பூதங்களும் ஒன்று பட்டால் அதன் சூட்சுமமான ஒளி, ஊறு ,ஓசை நாற்றம் என்ற ஐம்புலன்களும் ஒன்று சேரும் என, உணர்த்தப்படுகிறது
.நான் ஐம்புலன்களும் ஒருமைப்பட்டு, உன்னை நினையாமல், விடம் நிறைந்த கண்களும், தாமரை மொட்டு போன்ற கொங்கைகளும் உடைய பொது மகளிரை நினைந்து, மனம் குலைந்து அலைச்சல் உறுவேனோ கூத்தப் பெருமான் அருளிய குமரனே. உன்னை வணங்கும்