176.வாசித்துக்காணொணாதது
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
தானத்தத் தான தானன தந்ததான
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ரங்கவீரா
நாசிக்குட் பிராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் தம்பிரானே
-176 திரிசிராப்பள்ளி

.
சுருக்க உரை
நூல்களைக் கற்றுக் காண முடியாதது. பூசைகள் செய்து கூட முடியாதது. பேச்சால் விவரிக்க முடியாதது. மனத்தில் மாசு இருப்பவர்களுக்குப் புலப்படாதது. மாயையால் சூழ முடியாதது. விந்து நாதங்களுக்கு அப்பாற்பட்டது. உலகத்துக்கு முதற் பொருளாக உள்ளது. இந்தக் குணங்கள் வாய்ந்த பொருளை அடியேன் சேரும்படியான உபதேசத்தை எனக்கு சொல்லி அருளுக. இனியும் நான் இந்த உடலை வெறுக்காது மயங்குதல் நன்றோ?
தினைப்புனத்தைக் காவல் செய்த வேடப் பெண் வள்ளியின் மேல் ஆசை கொண்டு அவளுடைய அடிகளை வணங்கிய கந்த வேளே, சேல் மீனகள் பாய்கின்ற வயலூரில் பாம்பை நெருக்கித் தாக்கி, அவைகளை மாலையாக அணிந்த மயிலை வாகனமாகக் கொண்ட வீரனே, இரேசகம், பூரகம் ஆகிய யோக முறைகளாலும் காண முடியாது நின்ற தலைவனே. மிக உயரமான மேகத்தைச் சேர்கின்ற திரிசிரா மலையில் வாழும் சிவபெருமானுக்குக் குருவே, தேவர்கள் தம்பிரானே, நான் உடலை வெறுக்காது மயங்குதல் நன்றோ?

விளக்கக் குறிப்புகள்
இப்பாடலில் மெய்ப் பொருள் தத்துவங்கள் விளக்கப்படுள்ளன. நுண்ணிய உபநிட கருத்துக்களை, தெள்ளிய தமிழில் உணர்த்தும் சொல்லாக்கம் அருணகிரி நாதர் கவித் திறனை உணர்த்தும்.
ரேசகம் = வாயுவை நாசி வழியாகவெளியேற்றுவது. பூரகம் = பிராணாயாமத்துக்கு உறுப்பாகும் பிராண வாயுவை உள்ளே இழுப்பது. கும்பகம் = ஸ்வாசித்த வாயுவை உள்ளே நிறுத்தும் செயல்.
ஒப்புக:
வேடிச்சிக் காக மாமயலாகிப் பொற்பாதமே பணி...
குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் தினில் வீழா......................................திருப்புகழ், சொரியுமுகி