Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    175.புவனத் தொரு


    தனனத் தனனத் தனனத் தனனத்
    தனனத் தனனத் தனனத் தனனத்
    தனனத தனனத் தனனத் தனனத் தனதான


    புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
    கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
    புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி
    புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
    கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
    புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலூடே
    தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
    தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
    தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் திடவாய்கண்
    சலனப் படஎற் றியிறைச் சியறுத்
    தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
    தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் துயர்தீராய்
    பவனத் தையொடுக் குமனக் கவலைப்
    ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
    படரிச் சையொழித் ததவச் சரியைக் க்ரியையோகர்
    பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
    பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
    பரவப் படிசெய்ப் பதியிற் பரமக் குருநாதா
    சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
    கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
    த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் குணனாதி
    செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
    புதனொப் பிலியுற் பவபத் மதடத்
    த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் பெருமாளே

    -175 சிராப்பள்ளி



    பதம் பிரித்து உரை


    புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர
    கருவில் பவம் உற்று விதி படியில்
    புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி


    புவனத்து = இப்பூமியில் ஒரு பொன் தொடி = ஒருஅழகிய பெண்ணின் சிற்று உதர =
    சிறிய வயிற்றில் கருவில் பவம் உற்று = கருவில்தோற்றம் உற்று விதிப் படியில் = விதியில்குறித்தபடி புணர் = கூடுகின்ற.
    துக்க சுக = துக்கத்தையும், சுகத்தையும்.
    பயில் உற்று = அனுபவித்து மரித்திடில் = இறந்தபின் ஆவி = உயிரை.


    புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி
    அடி குத்து என அச்சம் விளைத்து அலற
    புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனல் ஊடே


    புரி அட்டகம் இட்டு = சூக்கும சரீரத்தில் புகுத்திஅது கட்டி = அந்த உடலைக் கட்டி இறுக்கி = (மேலும்) அழுந்தக் கட்டி அடி குத்து என = அடி,குத்து என்றெல்லாம் அச்சம் விளைத்து = பயத்தைஉண்டு செய்து அலறப் புரள்வித்து = அலறும்படிபுரட்டி வருத்தி = துன்பப்படுத்தி மணல் சொரிவித்து = (வாயில்) மணலைச் சொரிவித்து
    அனலூடே = நெருப்பினுள்.


    தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து
    அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை
    தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண்


    தவனப்பட விட்டு = சூடேறும்படியாக விட்டு.
    உயிர் = அந்த உயிரை செக்கில் அரைத்து = செக்கில்இட்டு அரைத்து அணி= வரிசையாக உள்ள பற்கள் உதிர்த்து = பற்களை உதிரும் படிச் செய்து எரி செப்பு உருவை = எரிகி ன்ற செம்பாலாகிய் உருவம்ஒன்றைத் தழுவும் படி செய்து முட்களில் கட்டி =முட்களில் கட்டி இசித்திட = இழுத்து வாய் கண் =வாயும் கண்ணும்.


    சலனப் பட எற்றி இறைச்சி அறுத்து
    அயில்வித்து முரித்து நெரித்து உளைய
    தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய்


    சலனப் பட = கலங்கி அசையும்படி எற்றி = மோதிஇறைச்சி அறுத்து = மாமிசத்தை அறுத்துஅயில்வித்து = உண்ணும்படி செய்து முரித்து = (எலும்பை) ஒடித்து நெரித்து = நொறுக்கி உளைய =வருந்தும்படி தளை இட்டு = விலங்கு பூட்டிவருத்தும் = துன்பப்படுத்தும் யம ப்ரகர = யமதண்டனை என்னும் துயர் தீராய் = துயரத்தைஒழித்து அருளுக.


    பவனத்தை ஒடுக்கும் மன கவலை
    ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில்
    படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர்


    பவனத்தை ஒடுக்கும் = பிராண வாயுவை ஒடுக்கும்மனக் கவலை = மனக் கவலை யாகிய ப்ரமை அற்று = மயக்கத்தை விலக்கி ஐ வகைப் புலனில் = ஐந்து வகையான புலன்களில் கடிதில் படர் =வேகமாகச் செல்லுகின்ற இச்சை ஒழித்த = ஆசையை ஒழித்த தவ = தவம் வாய்ந்த. சரியை,
    க்ரியை யோகர் = சரியையாளர்கள்,கிரியையாளர்கள், யோகிகள்.


    பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில்
    பரிசுத்தவர் விரத்தர் கருத்து தனில்
    பரவப்படு செய்ப்பதியில் பரம குரு நாதா


    பரிபக்குவர் = மல பரிபாகம் பெற்றவர் நிட்டை =தியானம் நிவர்த்தியினில் பரிசுத்தர் = துறவுகொண்ட பரிசுத்தர்கள் விரத்தர் = உலகப் பற்றுவிட்டவர்கள் (ஆகிய பெரியோர்கள்). கருத்து தனில் = தத்தம் கருத்தினில் வைத்து பரவப்படு =போற்றப்படுகின்ற குருநாதரே செய்ப்பதியில் =வயலூரில் பரமக் குருநாதா = பரமனுக்கும் குருநாதரே.


    சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்
    க(ண்)ணன் நக்கன் மழு கரன் உக்ர ரண
    த்ரி புரத்தை எரித்து அருள் சிற் குணன் நிற் குணன் ஆதி


    சிவன் உத்தமன் = சிவன், உத்தமன் நித்த உருத்திரன் = அழிவில்லாத உருத்திரன் முக்
    க(ண்)ணன் = முக்கண்ணன் நக்கன் = திகம்பரன்மழுக் கரன் = மழு ஏந்திய கையினன் உக்ர ரண =உக்கிரமான போர்க் களத்தில் த்ரி புரத்தை = மூன்றுபுரங்க ளையும் எரித்து அருள் = எரித்துஅருளிய சிற் குணன் = ஞான குணத்தைஉடையவன் நிற் குணன் = (முக்)குணங்கள்இல்லாதவன் ஆதி = மூலப் பொருள்.


    செக வித்தன் நிச பொருள் சிற் பரன்
    அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட
    த்ரிசிர புர வெற்பு உறை சற் குமர பெருமாளே.


    செக வித்தன் = உலகத்துக்கு மூலப் பொரு ளாகஇருப்பவன் நிசப் பொருள் = உண்மைப் பொருளாகஇருப்பவன் சிற் பரன்= அறிவுக்கு எட்டாதவன் அற்புதன்= அற்புதன் ஒப்பிலி = உவமைஇல்லாதவன் உற்பவ = (ஆகிய சிவபெருமானிடத்தே) தோன்றியவனே பத்ம தட =தாமரைத் தடாகங்கள் உள்ள த்ரிசிரப் புர = திரிசிராப்பள்ளி வெற்பு உறை = மலையில் வீற்றிருக்கும் சற் குமரப் பெருமாளே = நல்ல குமரப் பெருமாளே.



    .


    விளக்கக் குறிப்புகள்


    1புரி அட்டகம் இட்டு....
    ஐந்து பூதங்களுக்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற
    மூலப் பொருள்களுடன், மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்று
    கரணங்களும் கூடியது புரியட்டக உடம்பு (சூக்கும உடல்).
    ஆசை சேர் மனாதி தன்மாத் திரைபுரியட்ட கந்தான்). ..சிவஞான சூத்திரம்.


    புரியட் டகமே பொருந்தல் நனவு
    புரியட் டகந்தன்னின் மூன்று கனவு
    புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
    புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே ...திருமந்திரம் .


    2. சரியைக் க்ரியையோகர்....
    சரியையு டன்க்ரியை போற்றிய
    பரம தம்பெறு வார்க்கருள் தரு கணன்......................... .திருப்புகழ், அரிவையர்


    சரியை - சாலோகம் தரும். கிரியை - சாமீபம் தரும். யோகம் =-- சாரூபம்
    தரும். ஞானம் - அறிவு மாத்திரையானே செய்யும் வழிபாடு. ஞானம்
    சாயுச்யம் தரும்.
Working...
X