175.புவனத் தொரு
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத தனனத் தனனத் தனனத் தனதான
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் துயர்தீராய்
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
படரிச் சையொழித் ததவச் சரியைக் க்ரியையோகர்
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
பரவப் படிசெய்ப் பதியிற் பரமக் குருநாதா
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் குணனாதி
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
புதனொப் பிலியுற் பவபத் மதடத்
த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் பெருமாளே
-175 சிராப்பள்ளி

சுருக்க உரை
உலகில் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாய்த் தோன்றி, விதியின் படி கூடும் துக்கங்களையும், சுகங்களையும் அனுபவித்து, இறந்த பின், உயிரை சூக்கும சரீரத்தில் புகுத்தி, இறுக்கக் கட்டி, பல துன்பங்களுக்கு உட்படுத்தி, வருத்தி, யம தண்டனை என்னும் துயரத்தை நான் அடையாமல் ஒழித்தருளுக.
பிராண வாயுவை ஒடுக்கும் மயக்கத்தை விலக்கி, புலன்கள் வேகமாகச் செல்லும் ஆசையை ஒழித்த தவம் வாய்ந்த சரியை, கிரியை, யோகம் செய்பவர், மல பரி பாகம் பெற்றவர், ஞானிகள், தியானம் செய்பவர், துறவிகள் ஆகிய பெரியோர்கள் தங்கள் மனத்தில் வைத்துப் போற்றும் குரு நாதரே. வயலூரில் வீற்றிருக்கும் மேலான குருவே. சிவன், உருத்திரன், மூலப் பொருள், மழு ஏந்திய கையன், ஞான சீலன், ஆதி மூர்த்தி, உண்மைப் பொருள், அறிவிக்கு எட்டாதவன், ஒப்பிலி என்றெல்லாம் போற்றப்படும் சிவ பெருமானிடத்தே தோன்றியவனே, திரிசிராப் பள்ளி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் யம தண்டனைகளை அனுபவிக்காமல் காத்து அருளுக
.உலகில் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாய்த் தோன்றி, விதியின் படி கூடும் துக்கங்களையும், சுகங்களையும் அனுபவித்து, இறந்த பின், உயிரை சூக்கும சரீரத்தில் புகுத்தி, இறுக்கக் கட்டி, பல துன்பங்களுக்கு உட்படுத்தி, வருத்தி, யம தண்டனை என்னும் துயரத்தை நான் அடையாமல் ஒழித்தருளுக.
பிராண வாயுவை ஒடுக்கும் மயக்கத்தை விலக்கி, புலன்கள் வேகமாகச் செல்லும் ஆசையை ஒழித்த தவம் வாய்ந்த சரியை, கிரியை, யோகம் செய்பவர், மல பரி பாகம் பெற்றவர், ஞானிகள், தியானம் செய்பவர், துறவிகள் ஆகிய பெரியோர்கள் தங்கள் மனத்தில் வைத்துப் போற்றும் குரு நாதரே. வயலூரில் வீற்றிருக்கும் மேலான குருவே. சிவன், உருத்திரன், மூலப் பொருள், மழு ஏந்திய கையன், ஞான சீலன், ஆதி மூர்த்தி, உண்மைப் பொருள், அறிவிக்கு எட்டாதவன், ஒப்பிலி என்றெல்லாம் போற்றப்படும் சிவ பெருமானிடத்தே தோன்றியவனே, திரிசிராப் பள்ளி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் யம தண்டனைகளை அனுபவிக்காமல் காத்து அருளுக
விளக்கக் குறிப்புகள்
1புரி அட்டகம் இட்டு....
ஐந்து பூதங்களுக்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற
மூலப் பொருள்களுடன், மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்று
கரணங்களும் கூடியது புரியட்டக உடம்பு (சூக்கும உடல்).
ஆசை சேர் மனாதி தன்மாத் திரைபுரியட்ட கந்தான்). ..சிவஞான சூத்திரம்.
புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னின் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே ...திருமந்திரம் .
2. சரியைக் க்ரியையோகர்....
சரியையு டன்க்ரியை போற்றிய
பரம தம்பெறு வார்க்கருள் தரு கணன்......................... .திருப்புகழ், அரிவையர்
சரியை - சாலோகம் தரும். கிரியை - சாமீபம் தரும். யோகம் =-- சாரூபம்
தரும். ஞானம் - அறிவு மாத்திரையானே செய்யும் வழிபாடு. ஞானம்
சாயுச்யம் தரும்.