Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    174.பகலிரவினில்


    தனன தனனத் தனதானா


    பகலி ரவினிற் றடுமாறா
    பதிகு ருவெனத் தளிபோத
    ரகசி யமுரைத் தனுபூதி
    ரதநி லைதனைத் தருவாயே
    இகப ரமதற் கிறையோனே
    இயலி சையின்முத் தமிழோனே
    சகசி ரகிரிப் பதிவேளே
    சரவ ணபவப் பெருமாளே

    -174சிராப்பள்ளி



    பதம் பிரித்து உரை




    பகல் இரவினில் தடுமாறா
    பதி குரு என தெளி போத


    பகல் இரவினில் = பகல், இரவு என்னும்
    வேற்றுமை நிலையில் தடுமாறா = தடு மாற்றம் அடையாமல் பதி = ஆண்டவன் எனவும் குரு என = குரு எனவும் தெளி = தெளிவு தரும் போத =ஞான.


    ரகசியம் உரைத்த அனுபூதி
    (இ)ரத நிலை தனை தருவாயே


    ரகசியம் உரைத்து = ரகசிய உபதேசத்தைப்போதித்து அனுபூதி = திருவருட் பேறு என்கின்ற இரத = இனிய நிலை தனை = நிலையை தருவாயே = தந்து அருள்க.


    இக பரம் அதற்கு இறையோனே
    இயல் இசையின் முத்தமிழோனே


    இக பரம் அதற்கு = இம்மைக்கும் மறுமைக் கும் இறையோனே = தலைவனாய் நிற்பவனே இயல் இசையின் = இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோனே = முத்தமிழுக்கும் உரியவனே


    சக(ம்) சிரகிரி பதி வேளே
    சரவணபவ பெருமாளே.


    சக(ம்) = பூமியில் சிரகிரிப் பதி வேளே= சிர கிரி என்னும் தலத்தில் எழுந்தருளிய சரவணப் பெருமாளே = சரவணத்தில் உதித்த பெருமாளே .








    விளக்கக் குறிப்புகள்


    1. பகல் இரவினில் தடுமாறா....


    தத்துவங்களின் தொழில் பாடின்றி ஆணவ மலத்தோடு மாத்திரம் கூடியிருக்கும் ஆன்மாவின் கேவல நிலை.


    ஒப்புக:
    வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற.............திருப்புகழ், முகத்தைமினுக்கி.


    இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே.............கந்தர் அலங்காரம்
    .
Working...
X