171.அந்தோமனமே
தந்தானன தானன தாத்தன
தந்தானன தானன தாத்தன
தந்தானன தானன தாத்தன தனதான
அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
செண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர னருள்பாலா
எண்கூடரு ளால்நௌவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே
171 திரிசிராப்பள்ளி
தந்தானன தானன தாத்தன
தந்தானன தானன தாத்தன
தந்தானன தானன தாத்தன தனதான
அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
செண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர னருள்பாலா
எண்கூடரு ளால்நௌவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே
171 திரிசிராப்பள்ளி
சுருக்க உரை
மனமே, நீ இந்த உடலை நம்பாதே. இது இன்பத்துக்கும் துன்பத்துக்கும்
இடமான ஒரு கருவியாகும். பிரமன் செய்த ஒரு பூட்டு இது. நாம் செய்ய வேண்டியது பின் வருமாறு.
பயப்படாமல் அமைதியாக இருந்து, இவ்வுடலை வீணாக்காமல்
வேலவர்க்கு அன்பு அடிமைப் படுவோம். இதுவே நமக்கு நற்கதியாகும். நம்மை ஆள்வதற்கு மயில் வாகனப் பெருமான் வந்துள்ளார் என்பதற்கு அறிகுறியாக இதோ பார் அவர் தந்த அனுமதி சீட்டும், சிவ நீறும். இதை விட நாம் மேற் கொள் வேண்டிய சமய நெறியாது உள்ளது? மைந்தா, குமரா என்று மறக்காமல் ஓதவும்.
பேரிகைகள் முழங்க, சண்டை செய்ய வந்த மூர்க்கரான அசுரர்களை
சங்காரம் செய்த சிகா மணியே, மயில் வாகனனே, பிறை, கொன்றை,
கங்கை, இவற்றைச் சடையில் தரித்த சிவபெருமான் அருளிய
பாலனே, வள்ளியைக் களவியல் முறைப்படி மணம் செய்து, திரிசிராப் பள்ளியில் வீற்றிருக்கும் பெருமாளே, மைந்தா, குமரா என்னும் ஆர்ப்பு உய்ய மறவாதே

மைந்தா, குமரா, மறை நாயகனே முருகோனே, அருள் பால்,பெருமாளே என்று அறுமுகனை அன்போடு கூவி அழைத்துக் கொண்டே இரு. மறந்திடாதே. உய்யும் வழி இது ஒன்று தான் உளது என்று உருகா மனம் உருகி ஒத்துழைக்குமாறு அந்த மனத்திற்கு வினயம் காட்டி விண்ணப்பித்தபடி இந்தத் திருப்புகழ்.