168.எழுகுநிறை
தனதனன தான தனதனன தான
தனதனன தான தனதான
நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு கனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு தமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர குருநாதா
மழுவுழைக பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத ரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல் நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு பெருமாளே
-168திருக்கழுக்குன்றம்
(கதலிவனம், வேதகிரி, பக்ஷிதீர்த்தம்)
தனதனன தான தனதனன தான
தனதனன தான தனதான
நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு கனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு தமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர குருநாதா
மழுவுழைக பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத ரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல் நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு பெருமாளே
-168திருக்கழுக்குன்றம்
(கதலிவனம், வேதகிரி, பக்ஷிதீர்த்தம்)
சுருக்க உரை
அரி, அயன், அரன் ஆகிய யாவர்க்கும் தலைவியான ஆதி பராசக்தியின்
கொங்கையில் ஊறிய ஞானப்பாலைப் பருகிய இனிமைவாய்ந்த வாயை
உடையவனே. ஞானசம்பந்தராக அவதரித்து வைகையில் ஏடுகளை நீரில்
எதிர் செல்ல விட்டு வாதப் போர் செய்த கவி வீரனே. மான், மழு, கபாலம் ஏந்திய சிவபெருமானின் பாலனே,
பிரமனைக் குட்டிச் சிறையிலிட்டு சிருஷ்டித் தொழிலைச் செய்தவனே,
மறைகள் கடல் போல் ஒலிக்கும் வேதகிரியில் வீற்றிருக்கும்பெருமாளே,
உம்மைத் துதி செய்கிறேன்.

விளக்கக் குறிப்புகள்
1. இறைவி.....
( அரன் அரி அயன் அண்டர்க் கரியாள்)--திருப்புகழ் ( சகசம்பக்குடை).
2. மலர் அயனை...
பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைச் சிறையிலிட்டு அவனது
சிருட்டித் தொழிலை முருகவேள் தாமே செய்தார்.
( கமலத்தனை மணிக்குடுமி பற்றி மலர் சித்திர கரத்தலம் வலிப்ப பல
குட்டி நடனம்)— திருப்புகழ் (சுத்தியநர).
3. கடல் ஒலியதான மறை...
( முழாவொலி யாழொலி முக்க ணாயகன்
விழா வொலி மணத்தோலி வேள்வி யாவையும்
வழா வொலி மறை யொலி வானை யுங்கடந்
தெழா வொலி கடல் கிளர்ந் தென வொலிக்கு மால்)--அந்தகக் கவி வீரராகவ
முதலியார், திருக்கழுக்குன்றப் புராணம் நகர 13.
4. காழி கவுணியரில் ஞான புநிதன் என....
எழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு கொண்டிட வேற வென்றிடு முருகோனே)-- -திருப்புகழ் மூலமந்த்ர
நுகர்வித்தகமாகு மென்றுமை மொழியிற்பொழி பாலையுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே)--- திருப்புகழ், பகிதற்கரி.