164.வஞ்சக லோப மூடர்
தந்தன தான தான தந்தன தான தான
தந்தன தான தான தனதான
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர் சொல ருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதொ றாடல் மேவு பெருமாளே
-164 குன்றுதோறாடல்
தந்தன தான தான தந்தன தான தான
தந்தன தான தான தனதான
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி லழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர் சொல ருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு சமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி வெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதொ றாடல் மேவு பெருமாளே
-164 குன்றுதோறாடல்
சுருக்க உரை
வஞ்சகர், பிறருக்கு ஈயாதார், மூடர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று, பல வகையான தமிழ்ப்பா இனங்களால் அவர்களைப் பாரியே என்றும் காரியே என்றும் புகழ்ந்து பாடி, என் வாழ் நாளை வீணாக்கி அழியாமல், உன் செவ்விய திருவடியையும், ஒலி இசை செய்யும் கிண்கிணியையும், கடப்ப மலையையும்,வலிய வேலையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செந்தமிழப் பாக்களால் நாள் தோறும் ஓதி உய்ந்திட, நீ உனது கனி வாயால் ஒப்பற்ற உபதேசச் சொல்லை எனக்குப் போதித்து அருளுக.
பாண்டியனுடைய கூனும், சுரமும் பஞ்சாகப் பறந்தோடும்படியும், சமண ஊமைகள் அவர்களுடைய மயில் இறகோடு கொடிய கழுவில் ஏறும்படியும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதிய சம்பந்தராகிய அவதரித்த பண்டிதனே. திருநீற்றைப் பாண்டியனுக்குத் தந்தவனே. யானை, யாளி ஆகியவை இருந்த தினைப் புனக் காட்டில் வேடர்கள் ஒன்று கூடி வெறியாட்டம் ஆட, அவர்களுடைய பெண்ணாகிய வள்ளியை மணந்து, அவர்களுக்கு நல் வாழ்வை அளித்து, மலைகள் தோறும் விளையாடல் செய்யும் பெருமாளே. உலோபிகளிடம் சென்று யாசகம் செய்யாமல்,உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு உபதேசச் சொல்லை அருள்வாயாக
.வஞ்சகர், பிறருக்கு ஈயாதார், மூடர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று, பல வகையான தமிழ்ப்பா இனங்களால் அவர்களைப் பாரியே என்றும் காரியே என்றும் புகழ்ந்து பாடி, என் வாழ் நாளை வீணாக்கி அழியாமல், உன் செவ்விய திருவடியையும், ஒலி இசை செய்யும் கிண்கிணியையும், கடப்ப மலையையும்,வலிய வேலையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செந்தமிழப் பாக்களால் நாள் தோறும் ஓதி உய்ந்திட, நீ உனது கனி வாயால் ஒப்பற்ற உபதேசச் சொல்லை எனக்குப் போதித்து அருளுக.
பாண்டியனுடைய கூனும், சுரமும் பஞ்சாகப் பறந்தோடும்படியும், சமண ஊமைகள் அவர்களுடைய மயில் இறகோடு கொடிய கழுவில் ஏறும்படியும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதிய சம்பந்தராகிய அவதரித்த பண்டிதனே. திருநீற்றைப் பாண்டியனுக்குத் தந்தவனே. யானை, யாளி ஆகியவை இருந்த தினைப் புனக் காட்டில் வேடர்கள் ஒன்று கூடி வெறியாட்டம் ஆட, அவர்களுடைய பெண்ணாகிய வள்ளியை மணந்து, அவர்களுக்கு நல் வாழ்வை அளித்து, மலைகள் தோறும் விளையாடல் செய்யும் பெருமாளே. உலோபிகளிடம் சென்று யாசகம் செய்யாமல்,உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு உபதேசச் சொல்லை அருள்வாயாக
விளக்கக் குறிப்புகள்
1. வண் புகழ் பாரி, காரி என்றிசை வாது கூறி....
பாரி, காரி இருவரும் கடை ஏழு வள்ளல்களில் இருவர் ஆவர்.
கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினுங் கொடுப்பார் இலை
...சுந்தரரர் தேவாரம்
2. மஞ்சரி = பாக்களின் கொத்து , மஞ்சரிப்பா.
3. பஞ்சவன் = பாண்டியன்.
திகுதிகென மண்டவிட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்
திகையினமண் வந்து விட்டபோதினும் அமையாதே...
-----திருப்புகழ், திடமிலிசற்
4. வந்தியர் = அரச சபையில் அரசனுடைய புகழ் கூறுவோர்.