163.தறையின் மானுட
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன தந்ததான
தறையின் மானுட ராசையி னால்மட
லெழுது மாலருள் மாதர்கள் தோதக
சரசர்மாமலரோதியினாலிரு கொங்கையாலுந்
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
சவலை நாயடி யேன்மிக வாடிம யங்கலாமோ
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
ளணுகொ ணாவகை நீடுமி ராகிய
பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்
பகரொ ணாதது சேரவொ ணாதது
நினையொ ணாதது வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் வந்துதாராய்
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
மடிய நீலக லாபம தேறிய
திறல்வி நோதச மேளத யாபர அம்புராசித்
திரைகள் போலலை மோதிய சீதள
குடக காவிரி நீளலை சூடிய
திரிசி ராமலை மேலுறை வீரகு றிஞ்சிவாழும்
மறவர் நாயக ஆதிவி நாயக
ரிளைய நாயக காவிரி நாயக
வடிவி னாயக ஆனைத னாயக எங்கள்மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவு தாமலை யாவையு மேவிய தம்பிரானே
-163 குன்றுதோறாடல்
[giv6]பதம் பிரித்தல்
********
பறவையான மெய் ஞானிகள் மோனிகள்
அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்)
பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம்
பறவையான = (ஓரிடத்தில் தங்காது) பறவை போல எங்கும் திரிந்து உலாவும்
மெய்ஞ் ஞானிகள் = உண்மையான ஞானிகளும்.
மோனிகள் = மவுன நிலை கண்டவர்களும்
அணுக ஒணா வகை= அணுகுதற்குக் கூடாததாய்
நீடும் = விலகி விளங்கும்.
இராசியம் = இரகசியம்
பவனம் = காற்றை (மூச்சை)
பூரகம் = அடக்குவதால் (பிராணாயாமத்தால்).
ஏகிகமாகிய = ஒன்று படக் கூடிய
விந்து நாதம்=(சிவ தத்துவ)ஒலியாய் விளங்குவதும்
பகர ணாதது சேர ஒணாதது
நினை ஒணாததுவான தயாபர
பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய்
பகர ஒணாதது = சொல்ல முடியாததும்
சேர ஒணாதது = சேர ஒணாததும்
நினை = நினைக்கவும்
ஒணாததுவான = முடியாததுமான
தயாபர = கருணைப் பரம் பொருளாய்.
பதியதான = மூலப் பொருளான
மனோலயம் = மனதை ஒடுக்கும் சமாதி நிலைப் பேற்றை
வந்து தாராய் = நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும்.
சிறை விடாத நிசாசரர் சேனைகள்
மடிய நீல கலாபம் அது ஏறிய
திறல் விநோத சமேள தயாபர அம்புராசி
சிறை விடாத = (தேவர்களுடைய) சிறையின்றும் விடுவிக்காதஅசுரர்களின்
சேனைகள் = படைகள்
மடிய = இறக்கும்படி
நீல கலாபம் அது ஏறிய = நீல நிறங் கொண்ட மயிலின் மேல் ஏறி வரும்
திறல் விநோத = வல்லமை கொண்ட விநோதனே.
சமேள தயாபார = கருணை கலந்த மூர்த்தியே.
அம்புராசி = கடலின்
திரைகள் போல் அலை மோதிய சீதள
குடக காவிரி நீள் அலை சூடிய
திரிசிரா மலை மேல் உறை வீர குறிஞ்சி வாழும்
திரை போல் அலை மோதிய = பெரிய அலைகள் மோதி வரும்
குடக காவிரி = குடகு நாட்டிலிருந்து வரும் காவிரி ஆற்றின்
நீள் அலை சூடிய = பெரிய அலைகளைக் கொண்ட.
திரிசிராமலை மேல் உறை = திரிசிரா மலையில் வீற்றிருக்கும்.
வீர = வீரனே
குறஞ்சி வாழும் = மலை நிலத்தில் வாழும்.
மறவர் நாயக ஆதி விநாயகர்
இளைய நாயக காவிரி நாயக
வடிவின் நாயக ஆனை தன் நாயக எங்கள் மானின்
மறவர் நாயக = வேடர்களின் நாயகனே.
ஆதி விநாயகர் இளைய நாயக = ஆதி கணபதிக்குத் தம்பியாகிய தலைவனே
காவிரி நாயக = காவிரிக்கு தலைவனே
வடிவின் நாயக = அழகுக்கு ஒரு தலைவனே
ஆனை தன் நாயக = தேவ சேனைக்கு தலைவனே
எங்கள் மானின் = எங்கள் மான் போன்ற வள்ளி நாயகியிடத்தே
மகிழு(ம்) நாயக தேவர்கள் நாயக
கவுரி நாயகனார் குரு நாயக
வடிவதாம் மலை யாவு(ம்) மேவிய தம்பிரானே.
மகிழும் நாயக = மகிழும் நாயகனே.
தேவர்கள் நாயக = அமரர்கள் நாயகனே.
கவுரி நாயகனார் = பார்வதியின் நாயகனான சிவபெருமானுக்கு.
குரு நாயக = குரு மூர்த்தியே.
வடிவதாம் மலை யாவையும் = அழகிய மலைகள் எல்லாவற்றிலும்.
மேவிய தம்பிரானே = வீற்றிருந்து அருளும் தம்பிரானே.
தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன்,
நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள்
உண்டு[/div6]

சுருக்க உரை
மெய்ஞ்ஞானிகளும், மவுன நிலை கண்டோரும் அணுக முடியாது விளங்கும் இரகசியப் பொருளாவதும், பிராணாயாமத்தால் மனம் ஒன்று படக் கூடிய சிவதத்துவ ஒலியாய் விளங்குவதும், சொல்லவோ, சேரவோ, நினைக்கவோ முடியாததாய், கிருபைப் பரம் பொருளாய் விளங்கி நிற்கும் சமாதி நிலைப் பேற்றை எனக்குத் தந்து அருளுக. தேவர்களைச் சிறை வைத்த அசுரர்களை அழித்த மயில் விநோதனே. கருணைக் கடலே. கடல் போல அலைகளைக் கொண்ட காவிரி ஆற்றின் நாயகனே. திரிசிரா மலையில் உறைபவனே. வேடர்கள் நாயகனே. கணபதியின் தம்பியாகிய நாயகனே. அழகனே. தேவசேனைக்கு நாயகனே. வள்ளியோடு மகிழ்பவனே. சிவபெருமானுக்குக் குருவே. எல்லா மலைகளிலும் வீற்றிருப்பவனே. எனக்கு சமாதி மனோலயம் தந்து அருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்
1. ஆசையினால் மடல் எழுதும் மால் அருள்....
தான் காதலித்த தலைவியைப் பெறாவிடத்துத் தலைவன் பனங் கருக்கால்
குதிரை போல் செய்த ஊர்தி (மடல்) மேல் ஏறுதல்.
2. பறவையான மெய்ஞ் ஞானிகள்....
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்ஞான யோகிகளுளமே
யுறைதரு.................................................திருப்புகழ் ,காணொணாதது
3. பகரணொதாததுசேரவொணாதது...
காணொணாதது உருவவோ டருவது
பேசொணாதது உரையே தருவது)........................திருப்புகழ் காணொணதது.
4. அம்புராசி திரைகள் போலலை மோதிய...
கடற் போற் காவேரி
... சம்பந்தர் தேவாரம்.