Announcement

Collapse
No announcement yet.

162.அதிருங்கழல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 162.அதிருங்கழல்

    162.அதிருங்கழல்



    பதி எங்கிலும் இருந்து விளையாடி
    பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே.






    தனனந் தனன தந்த தனதானா

    ப ணிந்து னடியேனுன்
    அபயம் புகுவ தென்று நிலைகாண
    இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
    இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
    எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
    இறைவன் தனது பங்கி லுமைபாலா
    பதியெங் கிலுமி ருந்து விளையாடிப்
    பலகுன் றிலும மர்ந்த பெருமாளே

    161 குன்றுதோறாடல்
    பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் சொல்.
    முருகக் கடவுள் மலைக் கடவுளாதலின் அவரை
    மலைக் கிழவன், கிரிராஜன், குறிஞ்சி வேந்தன்
    என்றும் அழைப்பர்
    .



    பதம் பிரித்து உரை


    அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன்
    அபயம் புகுவது என்று நிலை காண


    அதிரும் = ஒலிக்கின்ற கழல் பணிந்து = கழல்கள் அணிந்த உன் திருவடிகளை வணங்கி உன் அடியேன் = உன் அடியோன் உன் அபயம் புகுவது என்று = உன்னிடம் சரணாகதி அடைவது எப்போது?நிலை காண = (இந்த நிலையில்லாத வாழ்வினின்று பிழைத்திருக்கும்) நிலையைக் காண்பதற்கு.


    இதயம் தனில் இருந்து க்ருபை ஆகி
    இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே


    இதயம் தனில் இருந்து = என் உள்ளத்தில் வீற்றிருந்து
    க்ருபை ஆகி = அருள் கூர்ந்து இடர் = என்னுடைய துன்பங்கள்சங்கைகள் = ஐயங்கள் (யாவும்) கலங்க = என்னை விட்டு நீங்கஅருள்வாயே = அருள் புரிவாயாக.


    எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும்
    இறைவன் தனது பங்கில் உமை பாலா


    எதிர் அங்கு ஒருவர் இன்றி = நிகர்ப்பவர் ஒருவரும் இல்லாதுநடமாடும் = நடனம் செய்கின்ற. இறைவன் = சிவபெருமானுடையதனது பங்கில் = ஒரு பாகத்தில் உறையும் உமை பாலா = உமா தேவியின் மகனே


    பதி எங்கிலும் இருந்து விளையாடி
    பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே.

    பதி எங்கிலும் இருந்து விளையாடி = தலங்கள் எல்லா இடத்திலிருந்தும் வீற்றிருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே = பல மலைகளிலும் உறையும் பெருமாளே.



Working...
X