161.புமியதனில்
தனதனனத் தனதான
புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
சமரி லெதிர்த் தசுர்மாளத்
தனியயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே.
- 160கயிலை மலை
தனதனனத் தனதான
புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
சமரி லெதிர்த் தசுர்மாளத்
தனியயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே.
- 160கயிலை மலை
சுருக்க உரை
பூமியில் அரசாகத் தோன்றிய சீகாழித் தலத்து ஞான சம்பந்தர் போல அமுதமான கவி மாலைகளைப் பாடுதற்கு எனக்கும் அருள் புரிவாயாக.
போரில் அசுரர்கள் மாளும்படி ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தியவனே, நமசிவய என்னும் ஐந்தெழுத்தின் மூலப் பொருளானவனே, கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் அமிர்த கவி பாடும் திறனைக் கொடுத்து அருள்க.