Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    160.புமியதனில்


    தனதனனத் தனதான


    புமியதனிற் ப்ரபுவான
    புகலியில்வித் தகர்போல
    அமிர்தகவித் தொடைபாட
    அடிமைதனக் கருள்வாயே
    சமரி லெதிர்த் தசுர்மாளத்
    தனியயில்விட் டருள்வோனே
    நமசிவயப் பொருளானே
    ரசதகிரிப் பெருமாளே.

    - 160கயிலை மலை



    பதம் பிரித்து உரை


    பூமி அதனில் பிரபுவான
    புகலியில் வித்தகர் போல


    பூமி அதனில் பிரபுவான = உலகில் அரசாகத் தோன்றிய
    புகலியில் = சீகாழித் தலத்து வித்தகர் போல = ஞான சம்பந்தர் போல்


    அமிர்த கவி தொடை பாட
    அடிமை தனக்கு அருள்வாயே


    அமிர்த கவித் தொடை பாட = அமுதமே இது என்று சொல்லத் தக்ககவி மாலைகளைப் பாடுதற்கு அடிமை தனக்கு அருள்வாயே =அடிமையாகிய எனக்கும் அருள் புரிவாயாக.


    சமரில் எதிர்த்த சுர் மாள
    தனி அயில் விட்டு அருள்வோனே


    சமரில் = போரில் எதிர்த்து = எதிர்த்து வந்த அசுர் = அசுரர்கள் மாள =மடியும்படி தனி அயில் விட்டு அருள் வோனே = ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தி அருள் வோனே.


    நமசிவய பொருளானோ
    ரசத கிரி பெருமாளே.


    நமசிவயப் பொருளானோ = நமசிவ என்னும் ஐந்தெழுத்தின் மூலப்பொருளானவனே ரசத கிரிப் பெருமாளே = வெள்ளி யங்கிரிப் பெருமாளே
    .


Working...
X