159.தேனுந்தும்
தானந்த னத்ததன தானந்த னத்ததன
தானந்த னத்ததன தனதான
தேனுந்து முக்கனிகள் பால்செங்க ருப்பிளநிர்
சீரும்ப ழித்தசிவ மருளூரத்
தீரும்பி டித்தவினை யேதும்பொ டித்துவிழ
சீவன்சி வச்சொருப மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம்ப ரப்பிரம வொளிமீதே
ஞானஞ்சு ரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளும்க ளிக்கபத மருள்வாயே
வானந்த ழைக்கஅடி யேனுஞ்செ ழிக்கஅயன்
மாலும்பி ழைக்கஅலை விடமான
வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு
மானின்க ரத்தனருள் முருகோனே
தானந்த னத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண்க டப்பமல ரணிமார்பா
தானங்கு றித்துஎம யாளுந்தி ருக்கயிலை
சாலுங்கு றத்திமகிழ் பெருமாளே.
- 159 கயிலைமலை (கைலாயம்)
[div6]விரிவுரை நடராஜன்
[தேன் உந்து முக்கனிகள் பால் செங்கருப்பு இளநிர்
சீரும் பழித்த சிவம் அருள் ஊற
சிறந்த தேனைப் பெருக்கும் முக்கனிகளான வாழை, பலா, மா, பால் தரமான கரும்பு, இளநீர் இவைகளின் இன்பச் சுவைகளைத் தோற்கடிக்கும் சிவானந்தம் ஊற்றுப் பெருக
( சிவ தியானத்தில் அனைத்தும் சிவமயம், எல்லாம் சிவன் செயல் எனும்
உணர்வு கூடும் போது உலக இன்பங்கள் கசந்து போகும்.
‘குமரனை மெய் அன்பினால் உள்ள உள்ள அரும்பும் தனிப் பரமானந்தம்
தித்தித்தது அறிந்த அன்றே கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து
அறக்கைத்ததுவே’ - கந்தர் அலங்காரம்.
பின் உடல் முழுவதும் ஒரு பேரின்ப உணர்ச்சி தூண்டப்படுகிறது. –
குமுளி சிவ அமுது ஊறுக உந்திப் பசியாறி - )
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப ...... மெனதேறி
தீங்குகளுக்கு காரணமான வினைகள் அழிந்து போக, ஜீவாத்மா பரமாத்மாவின் சொரூபம் என்பதை உணர்ந்து, ( மாயை காரணமாக ஜீவாத்மா தன்னுடைய உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் பிறப்பு இறப்பு எனும் சுழலில் அலைகிறது. ஆத்ம விசாரத்தால் அல்லது சத்குருவின் தீட்சையால் மாயை நீங்கி தன்னுடைய சிவ சொரூபத்தை அடைவதே முக்தி. ஆதி சங்கரர் பூர்ணா நதியில் ஆபத்சன்னியாசம் எடுத்துக் கொண்டு முறையாக குரு உபதேசம் வாங்கிக் கொள்வதற்காக வடக்கே செல்கிறார். நர்மதை நதிக்கரையில் ஒரு சிறிய குகைக்குள் நிஷ்டையில் இருந்த கோவிந்த பகவத் பாதரை விளிக்க, அவர் நீ யார் என்று கேட்டதற்கு அத்வைத ஞானத்தை பிழிந்து எடுத்த பத்து
செய்யுட்களை பாடுகிறார் சங்கரர். – (நிர்வாண ஷட்கம்)
நான் காற்று இல்லை, தீ அல்ல, நீரும் அல்ல, பூமியும் அல்ல,
இவைகளின் கூட்டும் நான் அல்ல, நான் மனம் சித்தம் புத்தி இதுவும்
இல்லை. தனித்து விளங்கும் சிவப்பரம் பொருளே நான் –
எனப் பதிலளிக்கிறார். அருணகிரியாரின் திருவாக்கும் இங்கு நினைக்கத்
தக்கது. - வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று தானன்று
நானன்று அசரீரி அன்று சரீரியன்றே - கந்தர் அலங்காரம் )
நான் என்பது அற்று உயிரொடு ஊன் என்பது அற்று
வெளி நாதம் பரப்பிரம ஒளி மீதே
நான் எனும் அகங்காரமும் மமகாரமும் தொலைந்து போக அகப்பற்றும்
( உயிர் மேல் உள்ள பற்று ) புறப்பற்றும் ( உடம்பின் மேல் உள்ள
பாசம் ) அழிந்து ( எனதாம் தனதானவை போயற மலமாங்கடு மோக
விகாரமும் இவை நீங்கிடவே ) வெளியில் விளைந்த பரநாதம் ஒளிக்கும்
சிவஞான ஒளி இடத்தே
ஞானம் சுரப்ப மகிழ் ஆநந்த சித்தியொடெ
நாளும் களிக்க பதம் அருள்வாயே
சிவஞானம் பெருக களிப்புடன் ஆனந்த நிலை அடைந்து தினந்தோறும்
மகிழ நின் திருவடி தீட்சை புரிய வேண்டும்.
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன்
மாலும் பிழைக்க அலை விடம் மாள
தேவர்கள் நல்வாழ்வு பெற ( மாதம் மும்மாரி பெய்ய ) நானும் ( என்னைப் போன்ற மற்ற அடியார்களும் நலமாக வாழ ) பிரமனும் திருமாலும் ஆலகால விஷத்தால் மாண்டு போகாமல் பிழைக்க கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை கெட
வாரும் கரத்தன் எமை ஆளும் தகப்பன்
மழு மானின் கரத்தன் அருள் முருகோனே
அதை வாரி எடுத்து உண்ட கையை உடையவன், எம்மை ஆண்டுகொண்ட
பரம பிதா, மழுவும் மானும் பிடித்துள்ள சிவபெருமான் பெற்ற குழந்தையே
தானந் தனத்ததனனா வண்டு சுற்றி மது
தான் உண் கடப்ப மலர் அணி மார்பா
தானந் தனத்ததன னா என்ற ஒலியுடன் வண்டுகள் மொய்த்து தேனை
உண்ணுகின்ற கடப்ப மாலைகளை அணிந்த மார்பனே
தானம் குறித்து எமை ஆளும் திருக்கயிலை
சாலும் குறத்தி மகிழ் பெருமாளே.
என்னுடைய பரிதாப நிலையை மனதில் கொண்டு என்னை
ஆட்க்கொண்ட பெருமாளே. கயிலைமலைப் பெருமாளே. மிகவும் அன்பு
செலுத்திய வள்ளிக்கு மகிழ்ச்சி கொடுக்கும் பெருமாளே.[div6]
குகஸ்ரீ இரசபதி விளக்கவுரை

சுருக்க உரை
முக்கனிகள், பால், கரும்பு, இளநீர் முதலியவற்றின் இன்பத்தைப் பழித்த சிவ அருள் பெருகுவதால், தீமைகளும், தொடர்ந்த வினைகளும் எல்லாம் பொடிபட்டு அழிய, சீவாத்மாவும் பரமாத்மனின் சொரூபமே என்னும் உண்மையை உணர்ந்து, நான் என்னும் அகங்காரம் அழிந்து, பர ஒளியில் ஞானம் பெருகி மகிழ்ச்சி தரும் சித்தியை அடைந்து நான் நாள் தோறும் மகிழ, உனது திருவடியைத் தந்து அருளுக.
பொன்னுலகமும், அடியேனும் செழிப்புற, பிரமனும் மாலும் பிழைக்கக், கடலில் எழுந்த விடத்தை தான் உண்ணும் கைகளை உடைய சிவ பெருமான் பெற்ற மகனே, வண்டுகள் சுற்றி மொய்க்கும் கடப்ப மலர் மாலையை அணிந்த மார்பனே, என் நிலையைக் கண்டு, என் நிலைமையை அறிந்து, எம்மை ஆள்கின்ற பெருமாளே, வள்ளி மகிழ்ந்த பெருமாளே. உனது திருவடியைத் தந்தருளுக.

வானம் தழைக்க
கடலை வானவர் கடைந்தனர். கடைக்கயிறான வாசுகி விஷத்தைக் கக்கியது. திசை எல்லாம் பரவியது தீ ஜ்வாலை. அப்பொழுது ஆன்மாக்கள் அலறி அழுதனர். அது கண்டு திருவுள்ளம் இரங்கி விமலன் உடனே வெளிப்பட்டான். எழுந்த விடத்தை வாரி எடுத்தான். உண்டான். நீல விஷம் கண்டத்தில் நின்றது. அன்று ஏகாதசி. இதனால் என்ன நேருமோ என்று தூவாதசி வரை அஞ்சி இருந்தனர் அமரர். திரியோதசி புண்ணிய காலம் தோன்றியது. இன்பம் அடைந்த தர்ம தேவதை ரிஷப உருவில் எதிர் நின்றது நலம் சிறந்த அதன் கொம்புகளுக்கு நடுவில் சாந்தி நிர்த்தம் செய்தான் சங்கரன். அமுதம் பருகி இறவா நிலை எய்தினர் இமையோர்.தகுதி பெற்ற வானுலகம் இப்படி தழைத்தது.
அடியேனும் செழிக்க
அண்டத்து வரலாறான இதனை ஊன்றி பிண்டத்தானும் உணர்ந்து வையத்தானான நானும் வளம் கொண்டேன்.
அயன் மாலும் பிழைக்க
படைப்பும் காப்பும் செய்ய பிரமனும் திருமாலும் பிழைத்தனர். இவ்வளவும் நேர,பரமரோடு விண்ணாடர் பறந்தோட புரந்தரனார் பதி விட்ட ஓட தேர் ஓடும் கயிர் ஓட விதி ஓட மதி ஓட திருமால் மேனிசுரர் ஓட தொடர்ந்து ஓட எழுந்த கடல் விடத்தின் வேகத்தை கட்டுப் படுத்தி அதை வாரி எடுக்க திருக்கரத்து வள்ளல் சிவ பெருமான் என்று நெருக்கமான வரலாற்றை சுருக்கமானஅடிகளில் சொல்லும் பெருமிதம் அருணகிரி முனிவரிடம் இயல்பாகவே அமைந்துள்ளது. அந்தகாசுரன் கயாசுரன் முதலியோரை அடக்கி உம்பர் தழைக்க உதவிய கரம் ஒன்று. அடியேன் செழிக்க அபய வரதம் காட்டிய கரம் இரண்டு. பிரமனும் திருமாலும் பிழைக்க அருமைத் தன் திரு மேனிக்கு அணிகலன் ஆகும் படி அவர்களை எடுத்து அணிந்த கரம் இரண்டு. அகிலத்தை அழிக்க எழுந்த விஷ ஆற்றலை அடக்கிய கரம் ஒன்று ஆக பத்துத் திருக்கரங்கள் பரமன் அருளிய முருகோனே என வரும் சிவனார் திருக்கர வகுப்பு 5 - ம் 6 - ம் அடிகளில் இருக்கிறது என்னும் பொருள் கொண்டு மகிழ்கின்றது நம் மனம். இப்பொருளில் வாரும் என்பது நீளும் என்ற பொருளில் வருகிறது. - வார்தல் போதல் ஒழுகல் மூன்று நேர்வும் நெடுமை செய்யும் பொருள் - என்கிறது தொல்காப்பியம். தழைக்க வாரும், செழிக்க வாரும், பிழைக்க வாரும்,விட மாள வாரும் கரத்தன் என கூட்டி பொருள் கொள்ளப்பட்ட இந்த நிலை கடைநிலை வாக்கு எனும் தொல்காப்பிய இலக்கணத்தில் அடக்கும். இங்ஙனம் பல வகையில் அருள்வோனை - எமது தகப்பன் எனும் அருமை அருமையிலும் அருமையே.
சிவபோகம் அருளுபவன் சிவகுமாரன். கடப்ப மலையை அதற்கு அடையாளமாக காட்டுகிறான். ( கடம் = உடல் ) கடத்திலிருந்து கடத்தி வளப்பமுடைய முருகன் திருவடி நிழலில் வாழ வைக்கின்ற காரணத்தினால் கனிவு தரும் அதன் பெயர் கடப்ப மலர் என பெயர் பெற்றது.
பண் சுமந்த தெய்வ வேத தேவதைகள் குறுகிய வண்டின் உருவம் கொண்டன. முன்னேறி கடப்ப மாலையை மொய்த்தன இனிய நாதம் எழுப்பின. அதன் பயனாக பேரின்பத் தேனை பருகின எனும் செய்தி தானந் தனத்ததனனா வண்டு சுற்றி மது தான் உண் கடப்ப மலர் அணி மார்பா என வெளியாகினது.
துன்ப இன்பத்தை சமமாக எண்ணுபவர்களை, ஆணவ அழுக்கு அகன்ற பக்குவம் பெற்றவர்களை இனி ஆட்கொள்ள வேண்டியது தான் என்று இடைவிடாது முருகப் பெருமானை எண்ணி துதித்துக் கொண்டிருக்கிறார் திருக்கயிலையில் வள்ளிஅம்மையார். அத்தேவியின் பெருங்கருணையை நோக்கி பெரும் மகிழ்ச்சி அடைகிறான் ஆறுமுகப் பெருமான். இவைகளை உணர்த்தும் இறுதி அடியில் தோய்ந்த (தானம் குறித்து எமை ஆளும் திருக்கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே.) நம் உள்ளம் துள்ளுகிறது அல்லவா ?
தேனும் முக்கனிகளும் பாலும் கருப்பம் சாறும் இளநீரும் மிக்க சுவை கொண்டுள்ளன. இவைகளைக் கொண்டே ஆண்டவனை அபிஷேகிக்கின்றனர் அடியார்கள். அதன் பயனாக ஊனெல்லாம் தோலெல்லாம் ஊன் உதிரமெல்லாம் என்பெல்லாம் என்பினுள் துளை எல்லாம்( bone marrow ) பாய்ந்து உயிருக்கு பயன் அளிக்கும் திருவருள் இன்பம் வளர்ந்து பூரித்துவருகின்றது பேறான அதன் முன் பிற சுவை எல்லாம் பிற்பட்டுப் போகும் இதனை சீரும் பழித்த சிவம் அருள் ஊற என்கிறார். - கனியினும் கட்டிக் கரும்பினும் பனிமலர் குழல்பாவை நல்லாளினும் தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன தன்னை அடைந்தாருக்கு இடைமருதனே- எனும் தமிழ் மறை இங்கு நம் நினைவிற்கு வருகின்றது. இந்த அனுபவத்தை, தேனார் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான் என உள்ளம் உருக்கும் மணிவாசகரின் கூற்றையும் உணர்வோம்.
ஊற்றுப் போல் இன்பத் திருவருள் உதயமாக கன்ம வினை அனைத்தும் அப்தோதே கால் சாயும். இதை அருளூற தீதம் பிடித்தவினை ஏதும் பொடித்து விழ என்பதில் பெற வைத்தார். முற்பிறவியில் செய்த நல்வினையும் தீ வினையும் இப்பிறவியில் தடைபடாமல் வந்து இன்ப துன்பங்களைத் தருகின்றன. தீதும் - உம் - என்பதில் நற்செயலோடு தீச்செயலும் கொண்ட வழக்கு உடைய இருவினையும் சாம்பலாக என்று பொருள் கொள்ளப் பெற்றது.
அருள் பெருக வினை அழியும் . அதன் பின் தத்வமஸி எனும் உபதேச சாதனை ( தத் = அது, த்வம் = நீ, அஸி = ஆகிறாய் ) சாதனையின் இறுதியில் அகம் பிரம்மாஸ்மி எனும் அனுபவம் கைவல்யமாகும் ( அகம் = நான், பிரம்ம = பிரம்மப் பொருள், அஸ்மி = ஆகிறேன் ) இந்நிலையே ஜீவன் சிவ சொரூபம் என்று அறிவிக்கப் பெற்றது. சாதனை வளர வளர மகா வாக்கியத்தில் உள்ள அகம் என்பது மறையும். அது மறையவே பிராணம் எனும் உயிர் ஊன் மயமான உடல் இவைகளின் அபிமானம் போகும். இவைகள் நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பதும் அற்று என்ற அடிகளில் வெளியாகின்றன.
வெறும் ஓசை ஒலிகளுக்கு இடம் பூத ஆகாயம். இதற்குள் சூக்கும ஆகாயம். அதற்குள் குண ஆகாயம். அதற்கும் உள்ளே கஞடசுக ஆகாயம்.அதனுள் இருக்கிறது காரண ஆகாயம். காரணத்துள் பிரணவ ஆகாயம். நான் எனும் நினைப்பு அழிந்து தேகாபிமானம் தோய்ந்த நிலையில் வெளியாகும் இதற்கு சிதாகாயம், ஞானாகாயம் என்று பெயர். இந்த ஆகாயத்தில் அபரநாதத்திற்கு அயலான பரநாதம் கேட்கும். பரப்பிரம்ம ஜோதி எனும் மெய்ப்பொருள் பேரொளியும் வித்தகமாகி அதனுள் விளையாடும்.
பூதாகாயத்தில் மின்னலும் இடியும் தோன்றி மறையும். அந்த இடியும் மின்னல்களும் ஞானாகாயத்தில் பரப்பிரம்ம ஜோதியும் பரநாதமுமாக என்றும் நிலையாகி இப்படித்தான் இருக்கும் எனும் நினைவை நம்முள் எழுப்புகின்றன.
பரநாதம் கேட்டு பரஞ்ஜோதியைப் பார்த்த அளவில் உயர்ந்த சிவஞானம் உதிக்கும் வரவர அந்த ஞானம் வளரும்பேறான சிவஞானம் பெருக பெருக அனிமா, மகிமா, லகிமா முதலிய எண்வகை சித்திகளுக்கு அயலான சிறந்த பேரின்பம் சித்திக்கும்
முருகா மேற்சொன்ன ஒவ்வொன்றும் நிறைவேறி இறுதியில் உரைத்த ஆனந்த சித்தியில் என்றும் ஊன்றி இன்புற்றிருக்க உனது திருவடி தரிசனம் உதவி அருள் என்பார்.
வெளி நாதம் பரப்பிரம ஒளி மீதே ஞானம் சுரப்ப மகிழ் ஆநந்த சித்தியொடெ
நாளும் களிக்க பதம் அருள்வாயே என்று பரம அன்பொடு பாடுகிறார். பதம் அருள்வாயே என்பதற்கு சிறந்த ஒரு மொழி உபதேசம் செய்தருள் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஊழி உணர்வார்கள் தங்கள் வினை தீர ஊனும் உயிருமாய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீதுகந்த பெருமாளே - என்றும், - வெளியே திரியும் மெய்ஞான யோகிகள் உளமே உறைதரு குமரா - என்றும் - துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம் அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக சுய படிகம் இன்ப பத்ம பதம் - என்றும், - உததரிச இன்ப புத்தமிர்த போக சுகம் உதவும் அமலானந்தர் - என வரும் திருப்புகழ் அடிகள் இங்கு நினைக்கத் தக்கவை.
முருகோனே, கடப்ப மலர் அணி மார்பா, பெருமாளே, சிவனருள் பெருக, அதனால் வினைகள் அழிய, அதன் பின் சிவயோக பாவனை சித்திக்க, அதனால் முனைப்பு அடங்க, தேகாபிமானம் தீர, ஞானாகாச பரநாத பரப்பிரம்ம ஜோதியை உணரும் சிவஞானம் உயர்ந்து எழ, ஆனந்த முத்தி உண்டாக வேண்டும். அதனில் இரண்டறக் கலந்து அடியேன் இருக்க, திருவடி தரிசனம் தந்தருள் என்று வேண்டும் பகுதியை ஓதும் போது - ஜீவன் ஒடுக்கம், பூத ஒடுக்கம், தேற உதிக்கும் பரஞான தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே எனும் திருப்புகழ் நாதம் நினைவில் புகுந்து நிர்த்தம் புரிகின்றது அல்லவா ?.