156.மாதர்வசம்
தானதன தானத் தனதான
மாதர்வச மாயுற் றுழல்வாரும்
மாதவமெ ணாமற் றிரிவாரும்
தீதகல வோதிப் பணியாரும்
தீநரக மீதிற் றிகழ்வாரே
நாதவொளி யேநற் குணசீலா
நாரியிரு வோரைப் புணர்வேலா
சோதிசிவ ஞானக் குமரேசா
தோமில் கதிர்காமப் பெருமாளே.
- 156 கதிர்காமம்
தானதன தானத் தனதான
மாதர்வச மாயுற் றுழல்வாரும்
மாதவமெ ணாமற் றிரிவாரும்
தீதகல வோதிப் பணியாரும்
தீநரக மீதிற் றிகழ்வாரே
நாதவொளி யேநற் குணசீலா
நாரியிரு வோரைப் புணர்வேலா
சோதிசிவ ஞானக் குமரேசா
தோமில் கதிர்காமப் பெருமாளே.
- 156 கதிர்காமம்
.
சுருக்க உரை
மாதர்கள் வசப்பட்டுத் திரிபவர்களும், நல்ல தவச் செயல்களை எண்ணாதவர்களும், தீமைகள் விலக நல்ல நூல்களைக் கல்லாதவர்களும் கொடிய நரகத்தில் விழுந்து கிடப்பார்கள்.
நாதனே, சுடரே, நற்குணத் தூயவனே, நற்குண சீலனே, வள்ளி, தெய்வயானை ஆகிய இருவரையும் புணரும் வேலனே, சோதியே, சிவஞானக் குமரேசனே, குற்றமில்லாத கதிர்காமப் பெருமாளே. நான் பெண்கள் வசப்படாமல் காத்து,நரகில் விழுவதை விலக்குவாயாக.

ஒப்புக
நாத ஒளியே...
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே) ... . திருநாவுக்கரசர் தேவாரம்
நாதவிந்து கலாதி நமோநம) ... திருப்புகழ், நாதவிந்து