Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    153.சரத்தேயுதித்தாய்


    யுரத்தே குதித்தே
    சம்ர்த்தா யெதிர்த்தே வருசூரைச்
    சரிப்போ னமட்டே விடுத்தா யடுத்தாய்
    தகர்த்தா யுடற்றா னிருகூறாச்
    சிரித்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
    செகுத்தாய் பலத்தார் விருதாகச்
    சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
    திருத்தா மரைத்தா ளருள்வாயே
    புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
    பொரத்தா னெதிர்த்தே வருபோது
    பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
    பொரித்தார் நுதற்பார் வையிலேபின்
    கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
    கருத்தார் மருத்தூர் மதனாரைக்
    கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
    கதிர்காம முற்றார் முருகோனே



    -153 கதிர்காமம்



    பதம் பிரித்தல்


    சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே
    சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை


    சரத்தே உதித்தாய் = நாணற் காட்டின் இடையே தோன்றிய வனாய்உரத்தே = வலிமையுடன் குதித்தாய் = குதித்து சமர்த்தாய் =சாமர்த்தியமாய் எதிர்த்தே வரு சூரை = எதிர்த்து வந்து சூரனை


    சரி போன மட்டே விடுத்தாய் அடுத்தாய்
    தகர்த்தாய் உடல் தான் இரு கூறா


    சரிப் போன மட்டும் விடுத்தாய் =சரியாக நடந்த வரையில் சும்மா விட்டிருந்தாய் அடுத்தாய் = பின்னர் அடுத்து நெருங்கி தகர்த்தாய் =பிளந்தாய் உடல் தான் இரு கூறா = உடலை இரண்டு கூறு ஆகும்படி.


    சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய்
    செகுத்தாய் பல தார் விருதாக


    சிரத்தோடு உரத்தோடு = தலையோடும், மார்போடும் அறுத்தே குவித்தாய் = அறுத்துக் குவித்தாய் செகுத்தாய் = கொன்றாய் பல தார் = பல மாலைகளைப் பெற்றாய். [தார் – இரண்டு நுனிகளும் சேர்க்கப்படாத ஆண்கள் அணியும் மாலை. இந்த வகை மாலைகள் ஸ்வாமிகளுக்கு சாற்றுவார்கள். தேவிகளில் ஆண்டாளுக்கு மட்டும் அணிவிக்கப்படும் மாலை இவ்வகை. ஏனினில் அது விஷ்ணுவின் மாலை]விருதாக = வெற்றிக்கு அடையாளமாக


    சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய்
    திரு தாமரை தாள் அருள்வாயே


    சிறை சேவல் பெற்றாய் = சிறகை உடைய சேவல் ஒன்றைப் பெற்றாய் வலக்காரம் உற்றாய் = வெற்றியை அடைந்தாய் திருத் தாமரைத் தாள் அருள்வாயே = உனது அழகிய தாமரை போன்ற திருவடியைத் தந்து அருளுக.


    புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார்
    பொரத்தான் எதிர்த்தே வரு போது


    புரத்தார் = திரிபுரத்தில் இருந்தவர்கள் வரத்தார் = பல வரங்களை உடையவர்களாக சரச் சேகரத்தார் = அம்புகளின் கூட்டத்தைக்கொண்டவர் பொரத் தான் எதிர்த்தே = சண்டை செய்வதற்குஎதிர்த்து வந்து போது.




    பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார்
    பொரித்தார் நுதல் பார்வையிலே பின்


    பொறுத்தார் = பொறுமையுடன் இருந்தார் பரித்தார் = போர்க் கோலத்தைத் தாங்கினார் சிரித்தார் = பின்பு சிரித்தார் எரித்தார் = திரி புரத்தை எரித்தார் பொரித்தார் = பொரிபடச் செய்தார் நுதல் பார்வையிலே பின் = நெற்றிக் கண்ணால் பின்பு.


    கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார்
    கருத்தார் மருத்து ஊர் மதனாரை


    கரித் தோல் உரித்தார் = யானையின் தோலை உரித்தார் விரித்தார் =அதை விரித்து தரித்தார் = அணிந்து கொண்டார் கருத்தார் = பிரமன் முதலான தேவர்களின் வேண்டு கோளுக்கு இரங்கி மருத்து ஊர் =தென்றற் காற்றைத் தேராகக் கொண்ட மதனாரை = மன்மதனை


    கரி கோலம் இட்டார் க(ண்)ணுக்கு ஆன முத்தே
    கதிர் கோல்ம் உற்றார் முருகோனே.


    கரிக் கோலம் இட்டார் = கரி மயமாக்கினார் (ஆகிய சிவபெருமானுக்கு) க(ண்)ணுக்கான முத்தே = கண்ணுக்கு விருப்பமான முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே = கதிர்காமம் என்னும் ஊரில் பொருந்தி வீற்றிருக்கும் முருகக்கடவுளே.



    [link[சுருக்க உரை


    நாணற் காட்டிடையே தோன்றி, வலிமையுடன் குதித்து வந்து
    சூரனை முதலில் சும்மா விட்டுப் பிறகு, நெருங்கி, அவன் உடலை
    இரு கூறாகும்படிப் பிளந்து, விருதாகப் பல மாலைகளையும்
    சேவலையும் பெற்றாய். உனது தாமரை போன்ற திருவடியை
    எனக்குத் தந்து அருளுக.


    திரிபுரங்களில் இருந்தவர்களைச் சிரித்து எரித்தவர், யானையின்
    தோலை அணிந்தவர். பிரமன் முதலிய தேவர்களுக்கு இரங்கி
    மன்மதனை கரியாக்கியவர். இத்தகைய சிவபெருமானுக்குப்
    பிரியமான முத்துப் போன்றவனே, கதிர்காமத்தில் வீற்றிருக்கும்
    பெருமாளே


    விளக்கக் குறிப்புகள்
    மதனாரைக் கரிக்கோலம் இட்டார்.....
    அரிய திரிப் புரம் எரிய விழித்தவன்
    அயனை முடித்தலை யரியு மழுக்கையன் ...திருப்புகழ், குருவியென[/link]
Working...
X