Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    152.கடகட கருவிகள்


    தபவகி ரதிர்கதிர்
    காமத் தரங்கம் மலைவீரா
    கனகத நககுலி புணரித குணகுக
    காமத் தனஞ்சம் புயனோட
    வடசிக ரகிரித விடுபட நடமிடு
    மாவிற் புகுங்கந் தவழாது
    வழிவழி தமரென வழிபடு கிலனென
    வாவிக் கினம்பொன் றிடுமோதான்
    அடவியி ருடியபி நவகும ரியடிமை
    யாயப் புனஞ்சென் றயர்வோனே
    அயிலவ சமுடன ததிதிரி தருகவி
    யாளப் புயங்கொண் டருள்வோனே
    இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
    ஏழைக் கிடங்கண் டவர்வாழ்வே
    இதமொழி பகரினு மதமொழி பகரினு
    மேழைக் கிரங்கும் பெருமாளே

    -152 கதிர்காமம்



    பதம் பிரித்தல்


    கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர்
    காம தரங்கம் அலை வீரா


    கடகட கருவிகள் = கட கட என்று ஒலி செய்யும் பறைமுதலிய கருவிகளின் ஓசையை தப = அடக் குவதாய் வகிர் அதிர் =கீற்றுக்களை உடைய புலிகள் ஒலி செய்கின்ற கதிர்காமம் =கதிர்காமம் என்ற தலத்தின் தரங்கம் அலை வீரா = கடலை வருத்திய வீரனே.




    கன கத நக(ம்) குலி புணர் இத குண குக
    காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட


    கனம் = பெருமை வாய்ந்ததும் கத நகம் குலி = கோபம்கொண்டதுமான மலையை ஒத்த யானை (ஐராவதம்) வளர்த்த தேவசேனையை புணர் = அணைந்த இத குண = இனிமையானகுணத்தை உடையவனே குக = இதய குகையில் வாழ்பவரே காம அத்தன் = மன்மதனுடைய தந்தையாகிய திருமால் அஞ்ச =பயப்படவும் அம்புயன் ஓட = தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஓடவும்.




    வட சிகரி தவிடு பட நடம் இடும்
    மாவில் புகும் கந்த வழாது


    வட சிகரி = வடக்கே உள்ள மேரு மலை தவிடு பட =பொடியாகும்படவும் நடம் இடு = நடனம் செய்கின்ற மாவில் =குதிரையாகிய மயிலின் மேல்.
    புகும் = ஏறி வரும். கந்த = கந்தனே. வழாது = தவறின்றி.




    வழி வழி தமர் என வழி படுகிலன் என்
    அவா விக்கினம் பொன்றிடுமோ தான்


    வழிவழி தமர் என = வழிவழியான உறவினன் என்று சொல்லும்படி.வழிபடுகிலன் = நான் உன்னை வழிபடவில்லை என் அவா = என்னி டமுள்ள மூன்று ஆசைகளும் விக்கினம் = மற்றும் உள்ள தடைகளும்பொன்றிடுமோ = (என்றைக்காவது) அழிந்து போகுமோ.


    அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய்
    அப்புனம் சென்று அயர்வோனே


    அடவி இருடி = காட்டில் தவம் செய்த சிவமுனிவரின் அபிநவ குமரி =புதுமையான புதல்வியாகிய வள்ளி நாயகிக்கு அடிமையாய் =அடிமையாகி அப் புனம் சென்று = அந்தத் தினைப் புனத்துக்குச்சென்று. அயர்வோனே = தளர்ச்சி உற்றவனே.




    அவசமுடன் அ ததி திரிதரு கவி
    ஆள புயம் கொண்டு அருள்வோனே


    அவசமுடன் = தளர்ச்சியுடன் அ ததி திரிதரு கவி = வெயிலால் மயக்கத்துடன் போய்க் கொண்டிருந்த கவியாகிய பொய்யா மொழியை ஆள = ஆண்டருள
    அயில் புயம் கொண்டு அருள்வோனே = வேலைத் தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே.


    இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள
    ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே


    இடம் = தமது இடது பாகத்தில் ஒரு மரகத மயில் மிசை = ஒப்பற்ற மரகத மயிலுக்கு மேலான அழகான வடிவுள = வடிவுள்ள ஏழைக்கு = ஏழையாகிய (பார்வதிக்கு) இடம் கண்டவர் = இடம் தந்தவரான சிவபெருமானின் வாழ்வே = செல்வனே


    இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும்
    ஏழைக்கு இரங்கும் பெருமாளே.


    இத மொழி பகரினும் = அடியேன் இனிய சொற்களைப் பேசினாலும்மத மொழி பகரினும் = ஆணவம் மிகச் சொற்களைப் பேசினாலும். ஏழைக்கு இரங்கும் பெருமாளே = இந்த ஏழையினிடத்துக் கருணை காட்டும் பெருமாளே.





    .




    விளக்கக் குறிப்புகள்


    இப்பாடல் நற்றாயிரங்கல் என்னும் துறையைச் சேர்ந்தது.
    ...நற்றாயிற் காட்டிப் புகழ்கலை
    கற்றார் சொற் கேட்கத் தனி வழி வருவோனே.
    --- திருப்புகழ், சிற்றாயக்கூட்ட.


    அயில் அவசமுடன் அ ததி திரிதரு.....


    இது பொய்யாமொழிப் புலவர் வரலாற்றைக் குறிக்கும் .


    தீவிர சக்தி உபாசகராகிய பொய்யாமொழி சக்தியைத் தவிர வேறு தெய்வங்களை வணங்கமாட்டார். அதுவும் முருகனின் பேரில் ஏனோ ஓர் இளக்காரம். 'கோழியைப் பாடும் வாயால் கோழிக்குஞ்சை நான்
    பாடுவேனோ' என்று அடிக்கடி சொல்வார். இப்படி பொய்யாமொழியின் வாயால் சிறுமைப் படுத்தபட்டுவந்த முருகன் தருணம் பார்த்துக் காத்திருந்தான். தருணமும் வாய்த்தது.


    ஒருமுறை பொய்யாமொழி காட்டுவழியே இன்னொரு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு திருடன் எதிரில் வந்து பாதையை மறித்துக்கொண்டான். முருகன் வேஷத்தில் வந்த அந்த என் பெயரை வைத்துப் பாடினால் தான் உன்னை விடுவேன்’ என்றான். ‘உன்னை வைத்துப் பாட பெயர் தெரிய வேண்டுமே’ என புலவ ர் சொல்ல ‘என் பெயர் முட்டை’ என்றான் முருகன். புலவரும் நற்றாயிரங்களல் துறையில் பின் வரும் பாட்டைப் பாடினார்


    பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
    என்பேதை செல்லற் கியைந்தேனே -- மின்போலு
    மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்
    கானவேல் முட்டைக்குங் காடு.
    (கான வேல் முட்டைக்கும் - கானவேல் முள் தைக்கும்)


    மின்னலைப் போல ஒளி வீசிச் சுடர்கின்ற சிறப்புமிக்க
    வேலாயுதத்தையுடைய 'முட்டை' என்னும் பெருவீரருக்கு
    மாறான எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்கின்ற காட்டில்,பல
    வேல மரங்கள் மிகுந்துள்ளன;அங்கு சூரியனின் உஷ்ணத்தினால்
    கள்ளிச் செடிகளும் சூடேறி பொன்போன்ற பொறிகளைப் பறக்க
    விடுகின்றன. அத்தகைய அக்கானகத்தில் வேல முட்களும் காலில் தைக்கக்
    கூடிய வழியில் தன் தலைவனோடு இந்தப்பெண் செல்லத்துணிந்தனளே!'
    இதுதான் பொருள்".


    ‘உன் பெயர் என்ன’ என்றான்.
    ‘பொய்யா மொழி’
    ‘நீனும் பொய். உன் பாட்டும் பொய்’ எப்படி என்கிறாயா? கள்ளி தீப்பட்டு பொறி பறக்குமாயின் வேல முள் சாம்பலாகிப் போயிருக்குமே’ என்றான் திருடனாக வந்த முருகன். ‘இப்போ உன் பேரில் நான் பாடிகிறேன், கேள்’ என்று கூறி இந்த பாட்டை பாடிக்காண்பித்தான்.

    விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
    எழுந்த சுடர்சுடு மென்றுஞ் - செழுங்கொண்டல்
    பெய்யாத கானகத்துப் பெய்வளையும் போயினளே
    பொய்யா மொழிபகைஞர் போல்.


    'வளமான மேகங்கள் தம்மிடத்திலிருந்து விழும் மழைத்துளிகள்
    அந்தக்கானகத்தில் விழும்போது, அந்தரத்திலேயே வெப்பமடையும்
    என்றும், அப்படியே தரையில் விழுந்தாலும் கீழேயுள்ள அனல் மேலே சென்று
    சுடும் என்றும் பயந்துகொண்டு, மேகங்கள் மழையைப்பொழியவும்
    அஞ்சுகின்ற காட்டினிலே, பொய்யாமொழிப் புலவரின் பகைவர்களைப்போல, வளையல் தரித்த அந்தப் பெண் தன் தலைவனோடு சென்றாளே!'


    ‘ஆமாம், கோழிக்குஞ்சைப் பாட மாட்டேன் என்றாயே, இப்போது அதைவிட சின்னதான முட்டையா பாடினாயே’ என முருகன் கேட்க புலவருக்கு அப்பொழுதுதான் புரிந்தது வந்தது முருகன் என்று.
    இப்படித்தான் பொய்யாமொழியை முருகன் தடுத்தாட் கொண்டான்.


    செப்பிக் கவிபெறு பெருமாளே
    --- திருப்புகழ்,பத்திரத்தர
Working...
X