Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    151.எதிரிலாதபத்தி


    எதிரி லாத பத்தி தனைமேவி
    இனிய தாள்நி னைப்பை யிருபோதும்
    இதய வாரி திக்கு ளுறவாகி
    எனது ளேசி றக்க அருள்வாயே
    கதிர காம வெற்பி லுறைவோனே
    கனக மேரு வொத்த புயவீரா
    மதுர வாணி யுற்ற கழலோனே
    வழுதி கூனி மிர்த்த பெருமாளே

    151கதிர்காமம்







    எதிர் இலாத பத்தி தனை மேவி
    இனிய தாள் நினைப்பை இருபோதும்


    எதிர் இலாத = இணை இல்லாத. பத்தி தனை = பக்தி நிலையை மேவி = அடைந்து இனிய தாள் = (உனது) இனிய திருவடிகளின் நினைப்பை = நினைப்பை இரு போதும் =காலை மாலை இரண்டுவேளைகளிலும்


    இதய வாரிதிக்குள் உறவாகி
    எனது உளே சிறக்க அருள்வாயே


    இதய வாரிதிக்குள் = மனமாகிய கடலில் உறவாகி = உறவு பூண்டு. எனது உ(ள்)ளே = என்னுடைய உள்ளத்தில் சிறக்க =சிறந்து விளங்க அருள்வாயே
    = அருள் புரிவாயாக.


    கதிர காம வெற்பில் உறைவோனே
    கனக மேரு ஒத்த புய வீரா


    கதிர காம வெற்பில் = கதிர் காமம் என்னும் மலையில்உறைவோனே = வீற்றிருப்பவனே கனக = பொன் மயமான
    மேரு ஒத்த = மேரு மலைக்கு ஒப்பான புய வீரா = (வலிய) புயங்களை உடைய வீரனே.


    மதுர வாணி உற்ற கழலோனே
    வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.


    மதுர = இனிமை தரும். வாணி உற்ற = நாதம் பொருந்தியகழலோனே = கழல்களை உடையவனே வழுதி=பாண்டியனது கூன் நிமிர்த் பெருமாளே = கூனை (சம்பந்தராக வந்து) நிமிர்த்திய பெருமாளே




    .


    விளக்கக் குறிப்புகள்


    1.வாணி உற்ற கழலோனே.....
    வாணி = நாதம் தோன்றும் இடம்.
    செஞ்சர ணாத கீத கிண்கிணி நீபமாலை---- -- திருப்புகழ், வஞ்சகலோப.


    இனிய நாத சிலம்பு புலம்பிடும்
    அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்--- திருப்புகழ், கமலமாதுடன்


    2.. வழுதி கூன் நிமிர்த்த...


    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    --- சம்பந்தர் தேவாரம்
Working...
X