Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    149.ஆதிமகமாயி


    யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
    ஆவுடைய மாது தந்த குமரேசா
    ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
    ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே
    பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
    பூரணசி வாக மங்க ளறியாதே
    பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகையே நினைந்து
    போகமுற வேவி ரும்பு மடியேனை
    நீதயவ தாயி ரங்கி நேசவருளேபுரிந்து
    நீதிநெறி யேவி ளங்க வுபதேச
    நேர்மைசிவ னார் திகழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
    நீலமயி லேறி வந்த வடிவேலா
    ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
    ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர
    ஊனுமுயி ராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
    ஊதிமலை மீது கந்த பெருமாளே.


    149 ஊதிமலை
    ( தாராபுரம் – காங்கேயம் வழியில். சஞ்சீவிமலை, பொன்னூதிமலை என்றும் கூறுவர் )



    பதம் பிரித்தல்


    ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த
    ஆ உடைய மாது தந்த குமரேசா


    ஆதி மகமாயி அம்பை தேவி = ஆதி முதலிய திருப் பெயர்களால் போற்றப்படும் சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது = சிவபெருமான் மகிழ்ந்த பசு ஏறும் இறைவியாகிய உமை தந்த குமரேசா = ஈன்ற குமரேசனே.


    ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று
    ஆளும் உனையே வணங்க அருள்வாயே


    ஆதரவு அதாய் வருந்தி = அன்புடனே மனக் கசிவுடன் ஆதி அருணேசர் என்று = ஆதி அருணாசலேசுரர் என்று ஆளும் உனையே = என்னை ஆண்டருளும் உன்னையே வணங்க அருள்வாயே = நான் வணங்க அருள் புரிவாயாக.


    பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து
    பூரண சிவ ஆகமங்கள் அறியாதே


    பூதம் அதுவான ஐந்து = ஐம் பூதங்களால் ஆகிய உடலில் பொறிகள் ஐந்தும் பேதம் இடவே = வேற்றுமைப்படவேஅலைந்து = அதனால் அலைந்து பூரண = முழுமையானசிவ ஆகமங்கள் அறியாதே = சிவாமகங்களை ஓதி அறியாமல்


    பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து
    போகம் உறவே விரும்பும் அடியேனை


    பூணும் முலை மாதர் தங்கள் = ஆபரணங்கள் அணிந்த கொங்கையை உடைய மாதர்களின் மேல் ஆசை வகையே நினைந்து = ஆசை பலவாறு மனதில் கொண்டு போகம் உறவே விரும்பி = அவர்களுடன் காம போக இன்பத்தையே விரும்புகின்ற அடியேனை = அடியேன் மேல்


    நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து
    நிதி நெறியே விளங்க உபதேச


    நீ தயவதாய் இரங்கி = நீ தயவுடன் இரக்கம் வைத்து நேச அருளே புரிந்து = நண்பான அருள் புரிந்து நீதி நெறியே விளங்க = நீதி மார்க்கமே திகழ உபதேச = உபதேச அறத்தின்.


    நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர
    நீல மயில் ஏறி வந்த வடிவேலா


    நேர்மை = நுண்மையை சிவனார் திகழ்ந்த காதில் உரை =சிவபெருமானின் விளங்கும் திருச் செவியில்
    வேத மந்த்ர = வேதமந்திரம் (உரைத்தவனே)
    நீல மயில் ஏறி வந்த வடிவேலா = நீல நிறம் உள்ள மயிலின் மேல் ஏறி வரும் கூரிய வேலனே.


    ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து
    ஊழி உணர்வார்கள் தங்கள் வினை தீர


    ஓது = ஓதப்படும், மறை = வேதமும், ஆகமம் = ஆகமும்,சொல் = சொல்லுகின்ற யோகம் அதுவே புரிந்து =யோகத்தையே புரிந்து ஊழி உணர்வார்கள் தங்கள் = விதியின் போக்கை அல்லது உலகை உணர்ந்து கொள்ளுபவர்களுடைய வினை தீர = வினை ஒழிய.


    ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
    ஊதி மலை மீது உகந்த பெருமாளே.


    ஊனும் உயிருமாய்= அவர்களுடைய உடலும் உயிருமாகவளர்ந்து = கலந்து வளர்ந்து ஓசையுடன் = கீர்த்தியோடுவாழ்வு தந்த = அவர்களுக்கு நல் வாழ்வை அருளும்ஊதிமலை மீது உகந்த பெருமாளே = ஊதி மலை மேல் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.



    திருநாவுக்கரசர் தேவாரம்.
Working...
X