148.பத்தியால்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே
-148இரத்தினகிரி
(குழித்தலைக்கு அருகில் உள்ளது)
ஐயர்மலை, சிவாயமலை, சிவைதைப்பதி, அரதனாசலம், இரத்தினவெற்பு, சிவாயம், வாட்போக்கி, மணிக்கிரி, மாணிக்கமலை என்றும் அழைக்கபடுகிறது

சுருக்க உரை
நான் உன்னைப் பல காலமாக உள்ளத்தில் தியானித்து உனது திருப்புகழைப் பாடி, ஞான நிலை பெற்றவனாகும்படியான முத்தி நிலையை அடைய அருள் புரிவாயாக.
உத்தமனே, ஈகைக் குணம் உடைய நல்ல குணம் படைத்தவர்களுக்கு நேசனே, ஒப்பில்லாத இரத்தின கிரியில் வாழ்பவனே, ஞானியே, ஞான பக்குவம் அடைந்தவர்களுக்கு அருள் சத்தியாக இருப்பவனே, வெற்றி வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, நான் முத்தியை அடைய அருள் புரிய வேண்டுகின்றேன்

விளக்கக் குறிப்புகள்
சத்திநி பாதா.... {இதுகாறும் மறைந்திருந்த இறைவனின் சக்தி அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் இறைவதே சத்தி நிபாதாம் ஆகும் அது ஆன்மாவின் தகுதிக்கேறப நான்கு வகைகளில் (பிரகாரமாக) நிகழுமென சைவ சித்தாந்தம் கூறுகிறது}
முதல் பிரகாரம்... வாழைத் தண்டில் நெருப்பு பற்றினால் போல இருக்கும் (மந்தம்) (நமக்குப் பேறாயுள்ளது ஒரு கர்த்தா என்று உணர்வது).
இரண்டாவது பிரகாரம் ...பச்சை விறகில் நெருப்பு பற்றினால் போல இருக்கும் (மந்த தரம்). (அந்தக் கர்த்தாவைப் பெறுகைக்கு வழி என்ன என்று ஆராய்வது).
மூன்றாம் பிரகாரம்... உலர்ந்த விறகில் நெருப்பைப் போன்றது (தீவிரம்). (கர்த்தாவைப் பெற உலகில் நாடுவது) நான்காம் பிரகாரம்... கரியில் நெருப்புப்
போன்றது (தீவிர தரம்). (உலகை முற்றும் துறந்து கர்த்தாவே பொருள் என்று கொண்டு தான் அற நின்று வழிபடுதல்).- (வ.சு.செங்கல்வராய பிள்ளை).
சத்தி நிபாதா.... சக்தி– அருள், நி– மிகுதி, பாதம்- பதிதல். திருவருள் ஞானத்தை ஆன்மாக்களுக்கு பதிய வைப்பவர் - வாரியார் ஸ்வாமிகள்