147.சுற்றகபடோடு
பல சூதுவினை யானபல
கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி
சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத மருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டுடமட டாடமட டுடுடுடு எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் பெருமாளே.
-147 இரத்தினகிரி
(குழித்தலைக்கு அருகில் உள்ளது)
ஐயர்மலை, சிவாயமலை, சிவைதைப்பதி, அரதனாசலம், இரத்தினவெற்பு, சிவாயம், வாட்போக்கி, மணிக்கிரி, மாணிக்கமலை என்றும் அழைக்கப்படுகிறது)

சுருக்க உரை
வஞ்சனை பலவும், சூதும் மிகுந்து, கள்ளத் தொழில் புரிபவர்கள், கொலை செய்பவர்கள், ஆகியவர்களோடு சிற்றின்பக் கடலில் மூழ்கி, துன்புற்று, சமுசாரம் என்னும் கடலில், வலையில் பட்ட மீன் போல அலைந்து, தீயிலிட்ட மெழுகு போல் உருகி, சுத்த வாழ்க்கை என்பதையே அறியாத வனாய், பொறிகள் வசப்பட்டு, யமன் வரும் சமயத்தில் கூட அதை அறியாமல், விலை மாதர்களைத் தேடிச் சென்று, காம லீலைகளைப் புரிந்து, பலரும் வெறுக்கும் படியாக வருத்தமுற்று, இறந்து படுவேனோ? உன் அழிவில்லாத திருவடியை எனக்குத் தந்து அருளுக.
பறைகள் பேரொலி செய்ய, திருமால், பிரமன், உமை, முனிவர்கள் எல்லோரும் களிப்புடன் ஆட, அசுரர்கள் வாடி மயங்க, தேவர்கள் பாட போர்க் களத்தில் மாமிசத்தை உண்டு, நரி, பேய், காக்கைகள் களிப்புடன் கூத்தாட, கூரிய வேலைச் செலுத்திய வேலனே. தினைப் புனத்தைக் காவல் செய்வதில் வல்ல வள்ளியைப் பல வேடங்களில் வந்து கலக்கிய காமுகனே,குகனே, வாட்போக்கியில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே, உன் அழிவில்லாத திருவடியைத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்
தத்தி முடிவாகி.....
தத்தி = தத்துறுதல் = வருந்துதல். நமசிவாயன் = சிவனது சிறப்புப்
பெயர். (நக்கர் தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே)...
சம்பந்தர் தேவாரம்.
(நாதன் நாமம் நமச்சிவாயவே)...சம்பந்தர் தேவாரம்.
நாகண வாய்ப்புள் – ஒருவகை பறவை