146.ஈனமிகு
ஈனமிகுத் துளபிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர
நாணமகற் றியகருணை புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
146 ஆறுதிருப்பதி
ஈனமிகுத் துளபிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர
நாணமகற் றியகருணை புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
146 ஆறுதிருப்பதி
சுருக்க உரை
இழிவு மிகுந்த பிறப்பு என்னை அணுகா வண்ணம், நானும் உனக்கு அடிமையாகும் திறத்தைப் பெற, ஞானம் என்னும் உனது திருவருளை அருளி, என் வினைகள் தீர, நாணம் என்னும் கட்டை விலக்கி உன் கருணையைத் தந்தருள்க.
அன்பர்கள் செய்யும் தானத்திலும் தவத்திலும் உள்ள மேன்மைப் பகுதியைப் பெறுபவனே, சரசுவதிக்குத் துணை புரிபவனே, சிவபெருமானுக்கு உகந்த தேவாரப் பதிகங்களைச் சம்பந்தராக வந்து அருளிய இளையவனே, ஆறு திருப்பதிகளில் விளங்கும் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்
1. ஆன திருப் பதிகம் அருளிய இளையோனே....
வாழ்க அந்தணர் என்ற திருப் பாசுரத்தைப் அருளிய சம்பந்த மூர்த்தியே.
2. ஆறு திருப் பதியில் வளர்...
ஆறு படை வீடு என்ரு கூறாமல் ஆறு திருப்பதி என்று கூறப்பட்டது. ஆறு திருப்பதிகள் திருமுருகாற்றுப் படையில் நக்கீரரால் எடுத்து ஓதப்பட்ட ஆறு தலங்கள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திரு ஆவினன்குடி,திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை. பின்னர் இவை ஆற்றுப்படை வீடு என மருவி அழைக்கப்பட்டன.
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய – திருப்புகழ் அலைகடல்
3. உத்தமி துணைவ...
சகோதர முறை உடையவனே என்றும் கொள்ளலாம்.