143.வரிக்கலை
[kd2]வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
மயக்கிவிடு மடவார்கள் மயலாலே
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
வயிற்றொலெரி மிகமூள அதனாலே
ஒருத்தருட னுறவாகி ஒருத்தாரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி யவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
மிகுத்தபல முடனோத மகிழ்வோனே
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடு புலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
திருக்கையினில் வடிவேலை யுடையோனே
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
திருத்தணிகை மலைமேவு பெருமாளே.[/hd2]
-143 திருத்தணிகை

சுருக்க உரை
மானைப் போன்ற கண்களின் கடையால் இளைஞர்களை மயக்கும் விலை மாதர் மீதுள்ள மோகத்தால், அறிவு குழப்பம் அடைந்து, கைப் பொருளை அம்மாதர்களிடம் கொடுத்து, வறுமையில் வாடி, ஒருவரிடம் நட்பும், ஒருவரிடம் பகைமையும் பூண்டு, ஊடாடி, உண்ணுவதற்கும் பிறரிடம் கையை நீட்டும் பாவியாகிய எனக்கு, உனது திருவடிகளைப் பாடும்படியான சிறந்த குணத் தூய்மையைத் தந்து அருளுக.
அருணகிரி நாதர் என்னும் புலவன் பாடிய திருப்புகழ் மாலையைப் பலமுடன் ஓத மகிழ்பவனே, அவமானத்தால் உயிர் துடித்து அமணர் கழு ஏறவும், மங்கயர்க்கரசியின் கணவனான கூன் பாண்டியன் மீண்டும் சைவ சமயத்துக்கு வரவும், ஒப்பற்ற தேவாரப் பாக்களைத் தமிழில் பாடிய சம்பந்தராகிய புலவனே, ஆணவத்துடன் போருக்கு வந்த அசுரர்கள் குலத்தை அடியோடு அழியும்படி செய்த வேலைக் கையில் ஏந்தியவனே, அழகு விளங்கும் தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, காமுகனாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட குண சீலம் தந்து அருள வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்
1.ஒருத்தி கணவனும் மீள......புலவோனே....
பாண்டியனுக்கு உற்ற சுரத்தின் வெப்பத்தால் அவன் அருகில் இருந்த சமணர்களின் மயிற்பீலி, குண்டிகை நீர், அசோகந்தளிர் யாவும் வெந்து போயின என்பர்.
பீலி வெந்துய ராவி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கோண்டிட வாது கொண்டரு ளெழுதேடு ...திருப்புகழ், மூலமந்திர
திகுதிகென மண்டவிட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது) ...திருப்புகழ், நிகனமெனி.
2. உணக் கை இடு - உண்ண வேண்டிக் கையை நீட்டுகின்ற.