142.வட்டவாட்ட
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி வயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை யழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு கழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த மயில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மால் திகிரி
யெட்டுமாக் குலைய எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய பெருமாளே.
- 142 திருத்தணிகை
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி வயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை யழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு கழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த மயில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மால் திகிரி
யெட்டுமாக் குலைய எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய பெருமாளே.
- 142 திருத்தணிகை
சுருக்க உரை
வட்டமான கொங்கையை உடைய மனைவி, அவள் பால் பெற்ற மழலை பேசும் குழந்தைகள், வயதான தாய், எனது ஊர், நாடு, வீடு, செல்வம், பொருள், சுற்றம், அறிவு இவை யாவும் அயலாக என்னை விட்டு நீங்க, யம தூதுவர் எருமையின் மேல் வந்து என்னைப் பாசக் கயிற்றால் அழைப்பதற்கு முன், என்னை ஞானியர் போலாக்கி, வேதங்களிலும், குரா மலர்களின் உள்ளும் விளங்கும் உன் கழலணிந்த திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.
நெற்றிப் பட்டமும், பெரிய தந்தங்களும், துதிக்கையும் உடைய ஐராவதம் யானை வளர்த்த தேவசேனையின் மணவாளனே. மூங்கில் பரண் மீது இருந்த வேடர்கள் பெண்ணாகிய வள்ளியின் தோளை அணைபவனே, உலகைக் காக்கும் எட்டு மலைகளும், எட்டு யானைகளும் நடுங்கும்படி வேலைச் செலுத்தியவனே, உன்னைப் போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதானவனே, உன்னைத் துதிப்பவர்களுக்கு எளிய பெருமாளே, உடல் நிலையாமையை உணர்ந்து உன்னைப் போற்றுவேனாக. உன் திருவடிகளைத் தந்தருளுக.

விளக்கக் குறிப்புகள்
1அறிவு அயலாக....
புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி
அறிவு அழிந்திட்டு ... சம்பந்தர் தேவாரம்.
(ஒக்க அடைக்கும்போதுணர மாட்டேன் .. திருநாவுக்கரசர் தேவாரம்
2. நாற்பெரு மருப்பினால்....
இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு.
3. பணவை - பரண். ஒருத்தல் - யானை. அஷ்ட கஜங்கள் : எட்டு திசைகளில் இருக்கும் மலைகளில் வசிக்கும் யானைகள் அஷ்டதிக் கஜங்கள் எனப்படும். திசைக் காவலர்கள் என்றும் சொல்வர்.அவைகள் முறையே, ஐராவதம்( கிழக்கு), புண்டரீகம் ( தென் கிழக்கு), வாமனம் ( தெற்கு), குமுதம் ( தென் மேற்கு), அஞ்சனம் ( மேற்கு), புட்பதந்தம் ( வடமேற்கு) சார்வபௌமம் ( வடக்கு) சுப்ரதிபம் ( வடகிழக்கு)
புண்டரீகத்தைப் பற்றிய குறிப்பு கந்த புராணத்தில் வருகிறது. சூரபத்மன் தேவலோகத்தை பிடித்தபோது அவனுடைய மந்திரி தர்ம கோபன், இந்த புண்டரீகத்தைப் சிறை பிடித்து, தன்னுடைய ஊராகிய மகேந்திரபுரிக்கு கொண்டு செல்கிறான். வீரபாகுத் தேவர் தூது சென்றபோது, சூர சேனைகளுடன் போரிட்டு, இந்த புண்டரீகத்தை மீட்டு வருகிறார்.
4.எத்திடார்க்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தி....இந்த அடியை ‘தொக்கறா’என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலிலும் காணலாம்.