139.பருத்தபற் சிரத்தினை
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப் பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப் பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப் புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத் திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத் தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைக்
சிரித்தெரித் தநித்தப்பொற் குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.
-139 திருத்தணிகை

சுருக்க உரை
பல்லோடு கூடிய தலையையும், ஒளி வீசும் கைகளையும், தாங்குகின்ற அந்தக் கால்களையும், கொண்ட பொய்யான குடமாகிய உடல், பழிக்கும், பாவத்துக்கும் இடமாகும். இவ்வுடல் மாயையான ஒரு தோல் பையாகும். முக்குற்றங்களாலும், ஐம்புலன்களாலும் கட்டப்பட்ட, நோய்களைத் தாங்கும் இந்தப் பிறப்பை ஒழிக்கும் கருத்தை எனக்குத் தந்தருள்வாயாக.
உன்னைப் புகழும் அடியார்களுள், வஞ்சனை உள்ளவர்களைத் தள்ளி, மெய் அடியார்களைச் சேர்த்துக் கொள்ளும் வீரனே, தினைப் புனத்தைக் காத்த வள்ளியை புயங்களில் அணைந்தவனே, போரில் எதிர்த்த முப்புரத்து அரக்கர்களைச் சிரித்து எரித்த சிவ பெருமானின் குமரனே, சிறப்புறும்படி அற நெறி கூறும் தமிழின் வட எல்லையில் உள்ள திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே, பிறப்பை அழிக்கும் கருத்தை எனக்கு அளித்து அருள வேண்டுகிறேன்.
முக்குற்றங்கள் (மலங்கள்) ஆவன - காமம், வெகுளி, மயக்கம்.
ஐம்புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.