Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    138.பகலி ராவினுங்


    பகலி ராவினுங் கருவி யாலனம்
    பருகி யாவிகொண் டுடல்பேணிப்
    பழைய வேதமும் புதிய நூல்களும்
    பலபு ராணமுஞ் சிலவோதி
    அகல நீளமென் றளவு கூறரும்
    பொருளி லேயமைந் தடைவோரை
    அசடர் மூகரென் றவல மேமொழிந்
    தறிவி லேனழிந் திடலாமோ
    சகல லோகமும் புகல நாடொறுஞ்
    சறுகி லாதசெங் கழுநீருந்
    தளவு நீபமும் புனையு மார்பதென்
    தணிகை மேவுசெங் கதிர்வேலா
    சிகர பூதரந் தகர நான்முகன்
    சிறுகு வாசவன் சிறைமீளத்
    திமிர சாகரங் கதற மாமரஞ்
    சிதற வேல்விடும் பெருமாளே

    -138 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    பகல் இராவினும் கருவியால் அ(ன்)னம்
    பருகி ஆவி கொண்டு உடல் பேணி


    பகல் இராவினும் = பகலிலும், இரவிலும் கருவியால் = உடல் என்னும்) கருவியால் அன்னம் பருகி = உணவு உண்டு
    ஆவி கொண்டு = உயிரை ஓம்பி உடல் பேணி = உடலை விரும்பி வளர்த்து.




    பழைய வேதமும் புதிய நூல்களும்
    பல புராணமும் சில ஓதி


    பழைய வேதமும் = பழமையான வேத நூல்களையும். புதிய நூல்களும் = நல்ல நூல்களையும் பல புராணமும் = பல வகையான புராணங்களையும் சில ஓதி = சிலவற்றை ஓதி உணர்ந்தும்.


    அகல(ம்) நீளம் என்று அளவு கூற அரும்
    பொருளிலே அமைந்து அடைவோரை


    அகலம், நீளம் என்று = அகலம், நீளம் என்று அளவு கூற அரும் = ஓர் அளவு சொல்லுதற்கு இயலாத பொருளிலே = பேரின்பப் பொருளில் அமைந்து = மனம் பொருந்தி அடைவோரை = (அப் பொருளை) அடைய வல்லோரை.


    அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து
    அறிவிலேன் அழிந்திடலாமோ


    அசடர் மூகர் என்று = முட்டாள்கள், ஊமையர் என்று அவலமே மொழிந்த = வீண் பேச்சுக்களைப் பேசி அறிவிலேன் =அறிவில்லாதவனாகிய நான் அழிந்திடலாமோ = அழிந்து போகலாமோ?


    சகல லோகமும் புகல நாள் தோறும்
    சறுகு இ(ல்)லாத செம் கழு நீரும்


    சகல லோகமும் = எல்லா உலகங்களும் புகல = புகழும்படி
    நாள் தோறும் = தினமும் சறுகு இல்லாத = மலர்தல் தவறாத செம் கழு நீரும் = செங்கழு நீரும்.


    தளவு நீபமும் புனையும் மார்ப தென்
    தணிகை மேவு செம் கதிர் வேலா


    தளவு = முல்லையும் நீபமும் = கடம்பும் புனையும் = அணிகின்ற மார்ப = மார்பனே தென் = அழகிய தணிகை மேவு =திருத்தணிகையில் விரும்பும் சங்கதிர் வேலா = செவ்விய ஒளி வீசும் வேலனே.


    சிகர பூதரம் தகர நான்முகன்
    சிறுகு வாசவன் சிறை மீள


    சிகர பூதரம் = சிகரங்களை உடைய மலையாகிய கிரௌஞ்சம்தகர = பொடிபடவும் நான்முகன் = பிரமனும் சிறுகு = தன் உயர்ந்த நிலையிலிருந்து தாழ்வு பட்ட வாசவன் = இந்திரனும்
    சிறை மீள = சிறையினின்றும் மீட்சி பெறவும்.


    திமிர சாகரம் கதற மா மரம்
    சிதற வேல் விடும் பெருமாளே.


    திமிர சாகரம் = இருண்ட கடல் கதர = கதறி ஒலிக்கவும் மா மாரம் = (சூரனாகிய) மா மரம் சிதற = சிதறுண்டு பிளவு படவும் வேல் விடும் பெருமாளே = வேலைச் செலுத்திய பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்
    அகல நீளமென் றளவு கூறரும்...


    அகல நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய
    அரிய மோன மேகோயி லெனமேவி . .. திருப்புகழ், அகலநீளம்.
Working...
X