136.நிலையாத சமுத்திரமான
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலமீதில் பிழைத்திட வேநி னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாக மிதுக்கன மாகு முருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத பெருமாளே.
-136 திருத்தணிகை

சுருக்க உரை
நிலை காணாத சமுத்திரம் என்று சொல்லத் தக்க சமுசாரம் என்ற நீர்த்துறையில் முழுகி, உண்மையையே பேசுகின்றேன் என்று சொல்லித் திரிந்து, பெரியோர்கள் உள்ள இடத்திலிருந்து மறைந்து விலகி, உனது திருவடிக்கு உண்டான பணிகளைப் போற்றிச் செய்யாது, பல நோய்களiல் ஊறி, பிறவி நோய் என்ற அலைச்சலை அனுபவித்து, ஒரு பயித்தியக் காரன் போல் தடுமாறி நான் தவியாமல், பிறப்புக்கு மூலகாரணத்தை அறிந்து, பிறவியை வேரோடு அறுத்து, உன் புகழை ஓதி, பூமியில் நான் பிழைத்து வாழுமாறு உன் திருவருளைத் தந்து அருள்வாய்.
வள்ளிக்குக் கணவனாக வாய்த்து, அவளுடைய புயங்களை அணைத்துத் திளைத்து விளையாடி மகிழ்ந்த உன்னைத் துணையாக நாடுகின்ற எனக்குத் நல் வாழ்வைத் தருவாயாக. உன்னைப் பல முறை துதிப் போர்க்கு அருள் செய்பவனே, செவ்வேளே, உன் பதியாகிய திருத் தணியை சிவலோகம் என்று ஆசை கொள்ளும் பெருமாளே. பிறவி நோயை அறுக்கும் வயித்தியநாதனே நான் பிழைக்க அருள் செய்வாயாக.

விளக்கக் குறிப்புகள்
புயத்தில் உலாவி விளையாடி....
தினமாமன் பாபுன மேவிய
தனி மானின் தோளுடன் ஆடிய
தினை மா இன்பா உயர் தேவர்கள் பெருமாளே... திருப்புகழ், கனவாலங்கூர்