Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    135தொக்கறா


    தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
    துக்கமாற் கடமு மலமாயை
    துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
    துப்பிலாப் பலச மயநூலைக்
    கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
    லப்புலாற் றசைகு ருதியாலே
    கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
    சட்டவாக் கழிவ தொருநாளே
    அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
    அர்ச்சியாத் தொழுமு நிவனாய
    அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
    வெற்பபார்ப் பதிந திகுமாரா
    இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
    வத்தினோர்க் குதவு மிளையோனே
    எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
    டெத்தினார்க் கெளிய பெருமாளே

    -135 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை


    தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக(ம்)
    துக்கம் மால் கடம் மு(ம்)மலம் மாயை


    தொக்கு அறா = தோல் நீங்காத குடில் = குடிசையாகிய உடல்அசுத்தம் ஏற்ற = அழுக்கை ஏற்றதும் சுக துக்க மால் கடம் =இன்பம், துன்பம், ஆசை கொண்டதுமான குடம்
    மும்மல மாயை = மும்மலங்களும், மாயையும்


    துற்ற கால் பதலை சொல் படா குதலை
    துப்பு இலா பல சமய நூலை


    துற்ற = நெருங்க வைத்த கால் பதலை = காற்று அடங்கும் பானை சொல் படா குதலை = சொல் சொல்லாக விளங்காத மழலைச் சொல் போன்ற துப்பு இலா = அறிவுக்குப் பொருந்தாத பல சமய நூலை = பல சமய நூல்களை.


    கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல
    புலால் தசை குருதியாலே


    கைக்கொளா = மேற்கொண்டு கதறுகை = வீண் கூச்சலை
    கொளா = கைப்பிடித்து ஆக்கை = உடம்பு அவல = துன்பத்துக்கு இடமான புலால் = மாமிசம் தசை குருதியாலே = சதை, இரத்தம் இவற்றால்.


    கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல
    சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே


    கட்டுக் கூட்டு = கட்டப்பட்ட கலப்பு அருவருப்பு = (மிக) வெறுக்கத்தக்க (பொருளான இந்த சரீரத்தை) வேட்டு = விரும்பிஉழல = திரிகின்ற எனக்கு சட்ட = நன்றாக வாக்கு அழிவது= வாக்கு
    அழிவதும் (மவுன நிலை கூடவும்) ஒரு நாளே = ஒரு நாள் வருமோ?


    அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர்
    அர்ச்சியா தொழும் முநிவனாய்


    அக்கு அராப் பொடியின் = எலும்பு, பாம்பு, திருநீறு (இவைகளை)மெய்க்கு இடா குரவர் = உடம்பில் அணிந்துள்ள பெரியவராகிய சிவபெருமான் அர்ச்சியாத் தொழு = அர்ச்சித்துத் தொழுதமுநிவன் ஆய = ஞானியாகிய.


    அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல்
    வெற்ப பார்ப்பதி நதி குமாரா


    அப்ப = அப்பனே போர் = போர் செய்ய வல்ல பன்னிரு = பன்னிருவெற்ப = மலை போன்ற தோளனே பூத் தணியல் வெற்ப =(குவளை) மலர் மலர்கின்ற தணிகை மலை (வாழ்வே).
    பார்ப்பதி = பார்வதிக்கும் நதி = (கங்கை) நதிக்கும் குமாரா =குமரனே.


    இக்கண் நோக்கு உறில் நிருத்த நோக்கு உறு
    தவத்தினோர்க்கு உதவும் இளையோனே


    இக்கண் நோக்கு உறில் = இந்தப் பூமியில் நோக்கம் என்பது
    இருந்தால் நிருத்த நோக்கு = அது உன்னுடைய நடனத்தை நோக்கும் நோக்கு ஒன்றே உறு தவத்தினோர்க்கு = அத்தகைய நோக்கை உடைய தவசிகளுக்கு. உதவும் இளையோனே =உதவும் இளையவனே.


    எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு
    எத்தினார்க்கு எளிய பெருமாளே.


    எத்திடார்க்கு = உன்னை ஏத்தாதவர்களுக்கு அரிய = அரியவனேமுத்த = பாசங்களை நீங்கிய முத்தனே தமிழ்கொடு = தமிழ்ப்
    பாக்களால் எத்தினார்க்கு = உன்னை எத்தினவர்களுக்கு எளிய = எளிய பெருமாளே = பெருமையின் மிக்கவரே.




    சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே


    விளக்கக் குறிப்புகள்


    அர்ச்சியா தொழும் முநிவனாய் : இது சிவபெருமான் தணிகையில் முருகவேளிடம் உபதேசம் பெற்றதைக் குறிக்கும்.
    சிலைமகள் நாயகன் கலைமகள் நாயகன்
    திருமகள் நாயகன் தொழும்வேலா ...
    திருப்புகழ்,கலைமடவார்.
Working...
X