134துப்பாரப்பா
எவருக்கும் எட்டாத குமரக்கடவுளின் திருவருளை நாடி வேண்டுதல்
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் பெருமாளே.
-134 திருத்தணிகை

சுருக்க உரை
ஐந்து பூதங்களும், முக்குணங்களும், மூவாசைகளும் நெருக்கமாக
வைக்கப்பட்டுள்ளதும், கிழிந்த தோலால் மேயப்பட்டதும், காம நோய்களுக்கு இடமானதுமான, இந்த வினைகளால் ஏற்படும் உடலின் மேல் ஆசை வைத்து, மீண்டும் உலகில் பிறவாமல், உன்னைத் துதியாதவர்களின் கல்விக்கு எட்டாததான உனது திருவடிகளை எனக்குத் தந்து அருள வேண்டும்.
உன்னைத் தவறாமல் துதிப்போரின் வினைகளைக் களைபவனே. செருக்கும், ஆணவமும் கொண்ட சூரனை அழித்தவனே, மெய்ஞ்ஞான
மூர்த்தியே, தணிகையில் வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலனே, இனிய சொற்களை உடைய தினைப்புனம் காத்த வள்ளியின் கொங்கைகளை அணைந்தவனே, அத்தனே. என்றும் அழிவில்லாதவனே, அப்பா, குமரப் பெருமாளே, உன் அருளைத் தந்தருள வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்
சித்தன் என்பது பிள்ளையாருக்குத் திருநாமம். இது முருகக்
கடவுளின் ஆயிரம் நாமங்களுள் ஒன்று (வ.சு.செங்கல்வராய பிள்ளை).
மூவாசை : மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை . ஒப்புக ‘மூவேடணை’ - அநுபூதி
மூவாசை, நிலையாமை,
தணிகை, வேல், வள்ளி, மெய்ஞ்ஞானம்