131.சினத்தவர்
முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
-131 திருத்தணிகை

சுருக்க உரை
கோபம் கொண்டவர்களின் தலைக்கும், பகைமை கொண்டவர் குடிக்கும், கொலை செய்வோர் உயிருக்கும், சிரிப்பவர்களுக்கும், பழிப்பவர்களுக்கும், திருப்புகழ் நெருப்பு போன்ற உண்மை என்பதை நாம் அறிவோம். திருப்புகழ் ஓதுதல் நினைத்ததைத் தரும், மனத்தை உருக்கும், பிறப்பை அறுக்கும், நெருப்பை எரிக்கும், மலையைப் பொடி படுத்தும். ஆதலால் உனது புகழை ஓதும் திருப்பணியை எனக்குப்
பணித்திடுவாய்.
பேரி, உடுக்கைப் பறை இவைகளின் பேரொலியோடும், படைகளோடும் போருக்கு வந்த சூரர்களை அழித்து, அந்தப் பிண மலைகளைச் சிரிப்பினால் கொளுத்திச் சாம்பலாக்கிய கதிர் வேலனே,தினை விளையும் மலையில் வள்ளியின் கொங்கையில் சுகித்து, சிறந்த திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் நிறைப் புகழைப் பாடும் பணியை எனக்குத் தருக.

விளக்கக் குறிப்புகள்
இந்தத் திருப்புகழ் முருகனின் ஆற்றலையும் பெருமையையும் விளக்கும். முதல் இரண்டு அடிகளில் துட்டர்களைத் தண்டித்தலையும், அடுத்த இரண்டு அடிகள் அடியார்களைக் காப்பதையும், ஈற்று இரண்டு அடிகள் அங்ஙனம் செய்வதற்கு எடுத்துக் காட்டுகளையும் காணலாம். ஏழாவது அடியில் அசுரர்களை அழித்ததையும், எட்டாவது அடியில் வள்ளியை மணந்து அருள் புரிந்ததையும் அருணகிரியார் எடுத்துக் காட்டுகிறார்.
இருமலுரோகம் என்று தொடங்கும் திருப்புகழை நோய் தீர்க்கும் மந்திரத் திருப்புகழ் என்றால், சினத்தவர் முடிக்கும் என்று தொடங்கும் பாடலைச் சித்தி தரும் தந்திரத் திருப்புகழ் என்றும் கூறுவர் ( வ.சு. செங்கல்வராய பிள்ளை).
ஒப்புக
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் குருநாதா ... திருப்புகழ்,கருப்புவிலில்.
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு மெனவோதும் ... திருப்புகழ்,இருப்பவல்.
1. சூரர் சினத்தையும் உடல் சங்கரித்து அம் மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா......
அழிக்கப்பட்ட அசுரர்களின் பிணக் குவியலை எரித்துச் சாம்பலாக்கினார்.
அழலெழ விழித்த லோடும் அடலையின் உருவாய் அழித்த ...
கந்த புராணம்