127.கவடுற்ற
உனது திருவடியின் உயர்வை அறிந்து உய்ய வேண்டும்
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவார்க்கக மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத் துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப் பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்
சரணப்ர சித்திசற் றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
குமுறக்க லக்கிவிக் ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
துதிரத்தி னிற்குளித் தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
றுவலைச்சி மிழ்த்துநிற் பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
சுருதித் தமிழ்க்கவிப் பெருமாளே.
127 திருத்தணிகை

சுருக்க உரை
வஞ்சகம் கொண்ட சித்தர்களும், ஆறு சமயங்களை மேற் கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், சிறந்த கடவுளர்களைப் ப்ரதிஷ்டை செய்து, பல பெயர்களைக் கொடுத்து, உருவ அமைப்பை ஏற்படுத்தித் துன்பத்துக்கு ஆளாகி ஏன் அலைய வேண்டும்? விலை மகளிர்க்குக் கொடுக்கும் பொருட்டுப் பொருள் தேடும் மக்கள், மெய்ப்பொருள் எல்லாவற்றிலும் ஒன்று பட்டும், அவைகளுக்குப் புறம்பாகியும் நிற்கும் உனது திருவடியின் புகழைச் சற்றேனும் உணர மாட்டார்களா?
எட்டு மலைகளையும் கடலையும் வருத்திய வலிமை வாய்ந்த சூரனுடைய உடலை அழித்து, அவனுடைய இரத்தத்தில் குளித்த வேலனே, அழகிய
செந்தினைப் புனத்தில் உதிர்ந்த பூக்களை மலையாகத் தொடுத்து நின்ற வள்ளி அம்மை நாணும்படி அவளைத் தொழுது நின்ற பெருமாளே, திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, மக்கள் உன் சரணப் புகழை உணர மாட்டார்களோ?

விளக்கக் குறிப்புகள்
1. கவடுற்ற சித்தர் சட் சமய.....
இந்தத் திருப்புகழ் வஞ்சக சித்தர்களையும், ஆடம்பர பூசை செய்பவர்களையும் கண்டிக்கின்றது.
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து மடலாலும்
ஆறார் தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமா றெரி தாமிந் தனத்து மருளாதே.. --- திருப்புகழ், ஆராதனராடம்
2. சுருதித் தமிழ்க்கவி......
தமிழ் வேதமாகிய தேவாரத்தைக் குறிக்கும். முருகன் ஞானசம்பந்தராக அவதரித்துத் தேவாரப் பாக்ளைப் பாடினார் என்பது அருணகிரி நாதர் கருத்து.
3. சட் சமயம்- புறப்புற சமயங்கள் 6, புறச் சமயங்கள் 6, அகப்புறச் சமயங்கள் 6, அகச்சமயங்கள் 6 ( இவ்வாறு, அவ்வாறு)