126.கலைமடவார்
இந்த ஆன்மாவின் துயர் நீங்க நினது திருமாலைத் தந்து அருள் புரியவேண்டும் என்பது துதி
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் பெருமாளே
-126 திருத்தணிகை

சுருக்க உரை
பெண்களின் வசைப் பேச்சாலும், சங்கின் ஒலியாலும், குயிலின்ஒலியாலும்,
பெருகியுள்ள நீராலும், எண்ணி எண்ணிக் கருதும்சிந்தையாலும் நிற்கும் இப்
பெண் கவலைப் பட்டு அழியாமல்,அவளுக்குக் குரா மலர் விளங்கும் திருப்புயத்
தில் கடப்ப மலையைத் தந்து அருள வேண்டும். பார்வதியின் தலைவனான சிவபெருமானும், சரஸ்வதியின் தலைவனான பிரமனும், இலக்குமியின் தலைவனான திருமாலும் தொழும் வேலனே,
தினைப்புனத்தில் வாழும் வள்ளியும், கற்பக வனத்தில் வாழும் தெய்வ யானையும் நெருங்கி அணையும் மார்பனே, பூமியில் வந்து தேவர்கள் உலாவும் தணிகையில் வாழும் வேலனே, சுற்றமும், பற்றும் ஒழித்துத் தனிமையில் தவம் செய்பவர்களின் தனிமையைப் போக்கும் பெருமாளே, காம நோயால் வாடும் இப் பெண்ணுக்குக் குளிர்ந்த கடப்ப மாலையைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது. தனித்திருந்து வருந்தும் துயர் உறும் தலைவிக் குக் குளிர்ந்த கடப்ப மாலயைத் தரவேண்டும் என்பது, தனித்திருந்து நின்று போற்றுபவரின் துயரைக் களைவது போல் என்ற கருத்து.
கலை மகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா....
திருமால் முருகனை வழிபட்டு தாரகாசுரனால் கவரப்பட்டத் தமது சக்கரம், சங்கு முதலியவற்றைப் திரும்பப் பெற்றார். பிரமன் முருகனை வழிபட்டு சிருட்டித் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார்.
ஒப்புக
சிவன் முருகனைத் தியானித்து உபதேசம் பெற்றார்.
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு னிவனாய.. --- திருப்புகழ்,தொக்கறாக்கு