124.எனையடைந்த
முக்திக்கு விண்ணப்பம்
எனைய டைந்த குட்ட வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு மிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி தரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி முனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு முருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு மணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட பெருமாளே
-124 திருத்தணிகை

சுருக்க உரை
சொல்ல ஒணாத வலிகளைக் கொடுக்கும் பிணிகளால் துன்பப் பட்டு, மனைவி, மக்கள் என்பவற்றை நினைந்து, அறிவு மயக்கம் அடைந்து, நான் இறவாமல், நீ பச்சை மயிலில் என் முன்னே தோன்றி, முத்தி தர வேண்டும்.
உன் பத்தர்கள் சுகத்துடன் வாழ, அவர்களுக்கு அருள் பாலிக்கும் வழியில் நிற்கும் வெற்றி பெறும் கூரிய வேலனே, வள்ளியின் பத்திச் செயலை அறிந்து அவளை அணைத்த மார்பனே, பிரமன் திகைக்க, அசுரர்கள் அன்று அடைத்த சிறையைத் திறந்து விட்ட பெருமாளே,மயிலில் வந்து எனக்கு முத்தி தர வேண்டுகின்றேன்.

ஒப்புக
1. எனையடைந்த குட்ட....
வேசையர் மயல்மேலாய் வெடுக் கெடுத்து மகா பிணி மேவிட முடக்கி வேட்கு மதாமத வீணனை --- திருப்புகழ், மலைக்கனத்தென.
1. எனையடைந்த குட்ட....
வேசையர் மயல்மேலாய் வெடுக் கெடுத்து மகா பிணி மேவிட முடக்கி வேட்கு மதாமத வீணனை --- திருப்புகழ், மலைக்கனத்தென.