123.எனக்கெனயாவும்
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
-123 திருத்தணிகை
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
-123 திருத்தணிகை
சுருக்க உரை
என் உடைமைகளுக்காக நாள் தோறும் உழைத்து, ஓய்ந்து போய், எடுக்கின்ற உடல்களைக் கொண்டு, பின்னர் இறந்து போகும் கேவலம் அழிய, என் பிறப்பு அற, அடியார்கள் விளக்கும் அறிவுரைகளை மேற்கொண்டு, உபதேச நெறிகளினின்றும் விலகாது, உன் திருவடியைத் தொழுவேனோ?
மன்மதனை அழித்த சிவபெருமான் பிரணவ மந்திரத்தை நீயே உரைப்பாய் என்று கேட்க, பிரமனும் வணங்கும் படி, வேதப் பொருளை உரைத்தவனே. சூரனை வேல் கொண்டு அழித்தவனே, வள்ளியுடன் தணிகை மலையில் வாழ்பவனே, பிறப்பு அற உன் திருவடியை நானும் தொழுவேனோ?
குறிப்பு
இலச்சை = வெட்கம். உளி = இடம்.