Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    123.எனக்கெனயாவும்

    எனக்கென யாவும் படைத்திட நாளும்
    இளைப்பொடு காலந் தனிலோயா
    எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
    இலச்சையி லாதென் பவமாற
    உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
    உரைத்திடு வார்தங் குளிமேவி
    உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
    பொலச்சர ணானுந் தொழுவேனோ
    வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
    விழக்கொடு வேள்கொன் றவனீயே
    விளப்பென மேலென் றிடக்கய னாரும்
    விருப்புற வேதம் புகல்வோனே
    சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
    சிரத்தினை மாறும் முருகோனே
    தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
    திருத்தணி மேவும் பெருமாளே.

    -123 திருத்தணிகை


    பதம் பிரித்து உரை

    எனக்கு என யாவும் படைத்திட நாளும்
    இளைப்பொடு காலம் தனில் ஓயா

    எனக்கு என = எனக்கேன்றே யாவும் = எல்லாம் படைந்திட =சேகரிக்க வேண்டி நாளும் = நாள்தோறும் இளைப்பொடு =உழைத்து காலம் தனில் ஓயா = காலக் கணக்கில் ஓய்வு இல்லாமல்.

    எடுத்திடு காயம் தனை கொடு மாயும்
    இலச்சை இலாது என் பவம் ஆற

    எடுத்திடு காயம் தனை கொ(ண்)டு = எடுக்கின்ற உடல்களை அடைந்து மாயும் = பின்னர் இறந்து போகும் இலச்சை =வெட்கம் இலாது = அழிய என் பவம் ஆற = என் பிறப்பு ஒழிய.

    உனை பல நாளும் திருப்புகழாலும்
    உரைத்திடுவார் தங்கு உளி மேவி
    உனைப் பல நாளும் = உன்னைப்பல நாட்களும் திருப்புக ழாலும் = திருப்புகழை உரைத்திடுவார் = கூறிப் புகழ்வோர்கள் தங்கு உளி மேவி = இருக்கும் இடத்துக்குச் சென்று

    உணர்த்திய போதம் தனை பிரியாது ஒண்
    பொல சரண் நானும் தொழுவேனோ

    உணர்த்திய போதம் தனை = (அவ்வடியார்கள் விளக்கும் ஞான) அறிவுரைகளை பிரியாது = விலகாது (ஒட்டி ஒழுகி) ஒண் பொல =ஒளி வீசும் அழகிய சரண் = திருவடியை நானும் தொழுவேனோ =தொழும் பாக்கியம் எனக்கும் கிட்டுமோ?

    வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
    விழ கொடு வேள் கொன்றவன் நீயே

    வினைத் திறமோடு = தொழிலில் திறமையுடன் அன்று எதிர்த்திடும் வீரன் = அன்று அம்பு எய்த வீரனானமன்மதன் விழ = (வெந்து) விழும்படி. கொடு = கொடிய வேள் = மன்மதனை கொன்றவன் = கொன்று எரித்த வனாகிய சிவபெருமான்.

    விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும்
    விருப்பு உற வேதம் புகல்வோனே

    நீயே விளப்பு என = (பிரணவ மந்திரத்தின் பொருளை)உரைப்பாயாக இனி மேல் என்று = நன்கு எனக்கூறிஇடக்கு அயனாரும் = (முதலில் உன்னை வணங்காது)முரண் செய்த பிரமனும் விருப்புற = விரும்பி மகிழ வேதம் புகல்வேனே = வேதப் பொருளை உரைத்தவனே.

    சினத்தொடு சூரன் தனை கொடு வேலின்
    சிரத்தினை மாறும் முருகோனே

    சினத்தொடு சூரன்தனை = கோபத்துடன் சூரனை கொடு
    = கொடுமை வாய்ந்த வேலின்= வேல் கொண்டு சிரத்தினை மாறும் = (சூரனின்) தலையைத் தள்ளி ஒதுக்கினமுருகோனே = முருகோனே.


    தினை புன மேவும் குற கொடியோடும்
    திருத்தணி மேவும் பெருமாளே.

    தினைப் புனம் மேவும் = தினைப் புனத்தில் வாழும் குறக் கொடியோடும் = கொடி போன்ற குறப் பெண்ணாகியவள்ளியுடன் திருத்தணி மேவும் = திருத்தணிகையில்வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே.


Working...
X