122.எலுப்பு நாடி
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர் கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ணுழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திட விடும்வோலா
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய பெருமாளே
-122 திருத்தணிகை

சுருக்க உரை
எலும்பு, நாடிகள், புழுக்கள் முதலியவை நிறைந்த உடலாகிய வீட்டில் எத்தனை மோசக்காரர்கள், அநீதி செய்பவர்கள், முதலிய குணக்கேடர்கள் தோன்றி, சமுசாரத்தில் வெற்றி பெற்று, மோக வலையில் கிடந்து, தவ நிலையைச் சற்றேனும் நினைக்காதவர்களாகப் பிணி உற்று உழல்வர். இத்தகைய வீட்டை நான் ஆசையுடன் எடுத்து இவ்வுலகில் திரிவேனோ?
பேரிகைகள் முழுங்க எதிர்த்து வந்த சூரனையும், கிரௌஞ்ச மலையையும் பிளந்து வேலைச் செலுத்தியவனே. திருமாலின் மருகனே. பிரமனைக் குட்டியவனும், பார்வதியை மணந்தவனுமாகிய சிவபெருமானுக்கு உபதேசம் அருளிய குருநாதனே. வள்ளியை அணைத்து மகிழ்ச்சியோடு திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்
1.மாபலியைச் சிறை வைத்தவன்.....
திருமால் காசிபரிடத்து வாமனனாக அவதரித்து, அசுர சக்ரவர்த்தி மாபலியிடம் மூன்று அடி மண் கேட்டார். அசுரப் புரோகிதர் சுக்கிரன் இது விஷ்ணுவின் மாயை என்று தடுத்தார். பலி அதை கேட்காமல் சம்மதிக்கவும் வாமனர் இரண்டு அடியால் மூவுலகை அளந்து, ஓரடி வைக்க இடம் பெறாமலிருக்க, மாவலி தன் தலையைக் காட்டினார். திருமால் மூன்றாவது அடியால் மாவலியின் தலையில் கால் பதித்து அவனைப் பாதளத்தில் அழுத்திச் சிறை இட்டார்.
ஒப்புக:
• விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் .... - திருப்புகழ், வதனசரோருக
• மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து - திருப்புகழ், நூலினை
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து
ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் - திருப்புகழ்,வேனின்மத
• திண் பதம் வைத்துச் சக்கிரவர்த்திக்குச் சிறை இட்டுச்
சுக்கிரன் அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய
நெடியவர் திருவும் அழகியர் - - திருப்புகழ்,மருவுகடல்முகி.
2.வலிக்க வேதனை குட்டி.....
பிரமனை முனிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறி — திருப்புகழ்,கறைபடு.
3. உள மகிழ்ச்சியோடு....
உலகில் உள்ள பல்வேறு மலைகளிலும் திருத்தணி மலையில் தான் தமக்கு அதிக மகிழ்ச்சி என்று முருகவேள் வள்ளிக்குக் கூறுகின்றார்.
சுந்தரக்கிரி தொல் புவி தனிற்பல எனினும்
இந்த வெற் பினில் ஆற்றவும் மகிழ்ச்சி உண்டெமக்கே--- கந்த புராணம் வள்ளியம்மை திருமணம்