121.எத்தனைகலாதி
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின் செடமான
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
கெத்தனைகொ லுனை நிமித்தம் பசியாறல்
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின் செயலான
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராது நிற்குங் கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் தகுதீதோ
தக்குகுகு டுடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னாத னுர்த்துமஞ் சதபேரி
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின் கிரிசூழச்
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் பெருமாளே.
-121 திருத்தணிகை
பெத்தமும் ஓராது நிற்கும் கழல் தாராய்

சுருக்க உரை
எத்தனை சண்டைகள், மாய வித்தைகள், நோய்கள், பைத்தியச் செயல்கள், இந்த உலகில் எடுத்த உடல்கள், வீரச் செயல்கள், ஆசைகள், ஊனைத் தின்று பசியைப் போக்கும் செயல்கள், இவைகளுக்கு ஆளான நான் பிறவியிலிருந்து விடுபட, அடியார்களின் செயல்களான தன்மையையும், மக்கள் முயற்சியால் அறியப்படாமல் நிற்பதும், பிரணவப் பொருளாக நிற்பதும், பாச பந்தத்தால் அறிதற்கரிதாக நிற்பதுமான உன் திருவடிகளைத் தந்தருளுக.
பேரொலியுடன் முரசுகள் ஒலிக்க, சித்தர்களும், வேடர்களும், மன்னர்களும், அடியார்களும் வலம் வர, ஞானத் தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் கழல்களைத் தாராய்.

ஒப்புக:
1. தாரம்.....
பிரணவம்.
தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியை
பாரத்தி னுள்ளே பரந்துள் எழுந்திட --- திருமந்திரம்
2. சிவப்பின் செக்கர் நிறம்...
செய்யன் சிவந்த ஆடையன்
... திருமுருகாற்றுப்படை, திருவேரகம் 1. தாரம்.....