120.உய்யஞானத்து
நெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ டுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி யுறவாகி
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச யிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் பணிவேனோ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர திகுமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு றவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு மருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய பெருமாளே.
-120 திருத்தணிகை

பதம் பிரித்து உரை
உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும்
உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி
உய்ய = (பிறவித் துயரினின்றும்) உய்யும் பொருட்டு ஞானத்து நெறி கைவிடாது = (நான்) ஞான மார்க்கத்தைக் கை விடாது.எப்பொழுதும் = எப்போதும் உள்ள வேதத்து உறை கொண்டு =உள்ள வேத சாத்திரங்களைக் கொண்டு. உணர்வு ஓதி = அறிவு தெளிற ஓதி.
உள்ள மோகத்து இருளை விள்ள மோக பொருளை
உள்ள மோகத்து அருளி உறவாகி
உள்ள = எனக்குள்ளிருக்கும் மோகத்து இருளை = மயக்க இருள்விள்ள = நீங்க மோகப் பொருளை உள்ள மோகத்து = ஆசை வைக்க வேண்டிய வீட்டின்பத்தைக் கருதும்படியான ஆசையை அருளி = உன் அருள் உதவியால் கிடைத்து. உறவாகி = உன் மீது விருப்பம் பெருகி.
வையம் ஏழுக்கும் நிலை செய்யும் நீதி பழைய
வல்லம் மீது உற்பல சயில மேவும்
வையம் ஏழுக்கு = உலகு ஏழினையும் நிலை செய்யும் நீதி = நிலை நிறுத்திக் காக்கும் நீதியைக் கொண்ட வள்ளியா =கருணையனே பழைய வல்லம் மீது = பழமை வாய்ந்ததிருவல்லம் என்னும் தலத்திலும் உற்பல சயிலம் மேவும் =நீலோற்பல கிரியிலும் (திருத்தணிகையிலும்) வீற்றிருக்கும்.
வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி
கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ
வள்ளியா = கருணையனே நின் = உன்னை புதிய வெள்ளில் தோய் = புதிய வில்வ மரத்தில் உள்ள முத்த முறி = கொழுந்து இலைகளை கிள்ளி வீசி உற்று = வீசிப் பூசித்து. மலர் = உன் மலரடிகளை பணிவேனோ = பணிய மாட்டேனோ?
பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி
துய்ய வேணி பகிரதி குமாரா
பை = படத்தை உடைய அராவை = பாம்பை. புனையும் =அணிந்துள்ள ஐயர் = பெரியார் (சிவபெருமானது). பாகத் தலைவி= இடது பாகத்தில் உள்ள பிராட்டி (பார்வதி) துய்ய
வேணி = பரிசுத்தமான சடையில் உள்ள பகிரதி = கங்கை
(இம்மூவர்க்கும்) குமார = குமரனே.
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது
நெய்யனே சுற்றிய குறவர் கோவே
பைய = மெதுவாக. மால் பற்றி வார் = மோகம் பற்றி வார்ந்த.சைய மேல் = மலையாகிய வள்ளி மலைமீது. வைக்கும் முது நெய்யனே = வைக்கும் காதல் முற்றிய நேயனே. சுற்றிய =உனக்குச் சுற்றமாக அமைந்த. குறவர் கோவே = குறவர்களுக்கு அரசே.
செய்யுமால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு
கைய மால் வைத்த திரு மருகனே
செய்யும் மால் செய்யும் வெற்பு = மயக்க இருளைத் தந்தகிரௌஞ்ச மலையை உருவ = ஊடுருவிச் செல்ல.
வெய்ய = கடுங் கோபங் கொண்ட வேல் சுற்றி விடு =வேலாயுதத்தைத் திரித்து விட்ட கைய = திருக்கையை உடையவனே மால் = திருமாலுக்கு வைத்த = வாய்த்த.
திரு = அழகிய மருகோனே = மருகனே.
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ
தெய்வ யானைக்கு இனிய பெருமாளே.
தெய்வ யானைக்கு = தெய்வ யானையாகிய கணபதிக்குஇளைய = இளையவனே வெள்ளை யானைத் தலைவ =ஐராவதத்துக்குத் தலைவனே தெய்வ யானைக்கு இனிய =தேவசேனைக்கு இனிமை தரும் பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை
பிறவித் துன்பத்தினின்றும் உய்யும் பொருட்டு நான் ஞான மார்க்கத்தை கைவிடாது, வேத முறைகளின்படி அறிவு தௌளிற ஓதி, என் மருள் நீங்க, வீட்டின்பத்தில் ஆசை கொள்ள, உன் அருளால் கிடைத்தது. ஏழு உலகங்களையும் நிலை நிறுத்தும் கருணையனே. புதிய வில்வ இலைகளை வீசி உன் மலரடிகளைப் பணிய மாட்டேனா?
சிவன், பார்வதி, கங்கை ஆகிய மூவர்க்கும் குமரனே. வள்ளியின் மேல் ஆசை வைத்தவனே. கிரௌஞ்ச மலை மேல் வேலை எய்தியவனே. திருமால் மருகனே. தேவசேனையின் கணவனே. பிறவி நீங்க வில்வ மலர்களை வீசி உன் மலர் அடிகளைப் பணிவேனோ.

விளக்கக் குறிப்புகள்
1மோகப் பொருளை....
பொருள் = வீட்டின்பம்.
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ, பொருளாகுமே -- சம்பந்தர் தேவாரம்.
2.உற்பலசயிலம் ... திருத்தணிகை.
3. வெள்ளை யானைத் தலைவ...
முருகனுக்கு இந்திரன் வெள்ளை யானையைத் தந்த காரணத்தால் முருகரும்
வெள்ளை யானைத் தலைவராயினர்.