118.உடலி னூடு
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத தனிஞானச்
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத சிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ லருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய அமராடி
மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி
மடையை மோதி யாறூடு தடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே
-118 திருத்தணிகை
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத தனிஞானச்
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீத சிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொ லருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய அமராடி
மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி
மடையை மோதி யாறூடு தடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே
-118 திருத்தணிகை
சுருக்க உரை
உடல், உயிர், உணர்வு, விண், தீ, காற்று, நீர், மண் முதலிய எல்லா இடங்களிலும், சமயச் சண்டை செய்பவர்கள் எவரிடத்தும், காணக் கிடையாத ஒப்பற்ற ஞான ஒளியினுள்ளும், வேதங்களின் முடிவிலும், யோகியர் தன் வசமாக நிற்கும் உயர் நிலையிலும், துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமான சிவ ரூபத்தை, பேதையாகிய நான் அடைய ஏதேனும் ஒரு உபதேசம் சொல்லி அருளுக.
தாமரைத் தடாகங்களில் வாழும் வாளை மீன்கள் தாவிக் கடலுக்குச் சென்று, அங்குள்ள பெரிய மீன்களை விரட்டி மீண்டும் அதே தடாகத்தில் வந்து சேரும் செழுமையான திருத்தணிகையின் காவலரே. கருணை மேருவே. தேவர் பெருமாளே. எனக்குச் சிவ ரூபம் அடைய உபதேசம் அருள்வாயே.

விளக்கக் குறிப்புகள்
மடல் அறாத வாரீசம்...
இப்பாடல் திருத்தணிகையின் செழிப்பையும், அப்பகுதியில் இருந்த தாமரைத் தடாகத்து வாளை மீன்களின் செழுமையையும் விளக்குகின்றது.
ஒப்புக
கடவுள் நீல மாறாத தணிகை....
காலைப் போதினில் ஒருமலர், கதிர் முதிர் உச்சி
வேலைப் போதினில் ஒருமலர், விண்ணெலாம் இருள் சூழ்
மாலைப் பேதினில் ஒருமலர், ஆகஇவ் வரைமேல்
நீலப் போது மூன்று ஒழிவின்றி நிற்றலு மலரும்
-- கந்த புராணம்