Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    116.இருப்பவல்


    இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
    இடுக்கினை யறுத்திடு மெனவோதும்
    இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
    னிலக்கண இலக்கிய கவிநாலுந்
    தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
    தலத்தினில் நவிற்றுத லறியாதே
    தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
    சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
    கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
    களிப்புட னொளித்தெய்த மதவேளைக்
    கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
    கனற்கணி லெரித்தவர் கயிலாயப்
    பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
    புறத்தினை யளித்தவர் தருசேயே
    புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
    பொருப்பினில் விருப்புறு பெருமாளே.

    - 116 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை
    இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
    இடுக்கினை அறுத்திடும் என ஓதும்


    இருப்பு அவல் திருப்புகழ் = கையிருப்பில் உள்ள அவலைப் போல (உயிர்போம் அத்தனி வழிக்குத்) திருப்புகழ் (உற்ற துணையாக இருக்கும்) விருப்பொடு படிப்பவர் = (அதனை) விருப்பத்தோடு படிப்பவர்களுடைய இடுக்கினை = துன்பத்தைஅறுத்திடும் = அறுத்து ஒழிக்கும் என ஓதும்= (என்னும் உண் மையை) எடுத்துக் கூறும்.


    இசை தமிழ் நடத்தமிழ் என துறை விருப்புடன்
    இலக்கண இலக்கிய கவி நாலும்


    இசைத் தமிழ் = இசைத்தமிழ் நடத் தமிழ் எனத் துறை =நாடகத்தமிழ் (அகப் பொருள்) துறைப்பாக்கள் என்னும் வகையில் விருப்புடன் = விருப்பத்துடன் இலக்கண இலக்கிய கவி நாலும் = இலக்கணம் பொருந்திய, இலக்கியத்தின் பாற்படும் (ஆசு, மதுர, சித்தரம், வித்தாரம் எனப்படும்) நால் வகைக் கவிகளையும்.


    தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சக
    தலத்தினில் நவிற்றுதல் அறியாதே


    தரிப்பவர் = (உள்ளத்தில்) அணிபவர் உரைப்பவர் =உரைப்பவர்கள் நினைப்பவர் = நினைப்பவர்கள் (ஆகிய அடியார்களை) மிகச் சக தலத்தனில் = மிகவும் இவ்வுலகில்நவிற்றுதல் அறியாதே = நான் சொல்லிப் புகழாமல்.




    தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உறுக்கிடு
    சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ


    தனத்தினில் = கொங்கையாலும் முகத்தினில் = முகத்தாலும்மனத்தினில் உருக்கிடு = மனத்தில் உருகச் செய்யும் சமர்த்திகள் = திறமை கொண்ட (பொது மகளிருடைய) மயக்கினில் = காம மயக்கத்தில். விழலாமோ = நான் விழலாமோ?


    கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல்
    களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை


    கருப்பு வில் = கரும்பாகிய வில்லை வளைத்து = வளைத்து. அணி மலர்க்கணை தொடுத்து = அதில் அழகிய மலர்ப் பாணங்களைத் தொடுத்து இயல் = பொருந்திய களிப்புடன் = செருக்குடன்ஒளித்து = ஒளித்திருந்து எய்த = செலுத்திய.
    மத வேளை = மன்மதனை.


    கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு
    கனல் க(ண்)ணில் எரித்தவர் கயிலாய


    கருத்தினில் நினைத்து = மனத்தில் நினைத்த மாத்திரையில்.அவன் நெருப்பு எழ = அவன் தீயில் வேகும் படி. நுதல் படு கனல் க(ண்)ணில் எரித்தவர் = தமது நெற்றியில் உள்ள நெருப்புக் கண்ணால் எரித்தவரும்.


    பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு
    புறத்தினை அளித்தவர் தரு சேயே
    கயிலாய பொருப்பினில் இருப்பவர் = கயிலை மலையில் இருப்பவரும். பருப்பத உமைக்கு = இமய மலையில் வளர்ந்த உமா தேவிக்கு ஒரு புறத்தினை = (தமது) இடப் பாகத்தை.அளித்தவர் = தந்தவருமாகிய சிவபெருமான். தரு சேயே = பெற்ற குழந்தையே.
    புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி
    பொருப்பினில் விருப்பு உறு பெருமாளே.
    புயல் = மேகங்கள் தங்கும் பொழில் = சோலைகளும். வயல் பதி =வயல்களும் உள்ள ஊராகிய. நயப்படு = இனிமை வாய்ந்ததிருத்தணி பொருப்பினில் = திருத்தணிகை மலையில் விருப்புறு பெருமாளே = விரும்பி வாழும் பெருமாளே.




    ஒப்புக:
    1.இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்...
    சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
    செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
    திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம் --- திருப்புகழ், சினத்தவர்
    தொண்டாகிய வென் னவிரோத ஞானச் சுடர்வாள்
    கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே கந்தர் அலங்காரம்
    சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே - கந்தர் அலங்காரம்.
Working...
X