116.இருப்பவல்
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே.
- 116 திருத்தணிகை

சுருக்க உரை
காலன் ஊருக்குப் போகும் வழியில் கையில் உள்ள அவலைப் போல் மன வன்மையைத் தரும் திருப் புகழை விருப்பத்துடன் படிப்பவர்களின் மனச் துயரங்கள் நீங்கும். அகப் பொருள் துறைப் பாக்கள் என்னும் வகையில், திருப்புகழில் உள்ள முத்தமிழின் பல்வகைக் கவிகளையும் உள்ளத்தில் தரிப்பவர்கள் நான் சொல்லிப் புகழாமலேயே, பெண்ணாசையாகிய மயக்கத்தில் விழாமல் காப்பாற்றப் படுவார்கள்.
கரும்பு வில்லைத் தாங்கிய மன்மதனை நினைத்தவுடனே, அவன் நெருப்பில் வேகும் வண்ணம் தன் நெற்றிக் கண்ணால் எரிப்பவரும், கயிலை மலையில் வீற்றிருப்பவரும், உமை தேவிக்கு ஒரு பாகத்தை அளித்தவருமான சிவபெருமான் தந்த குழந்தையே. வயல்கள் சூழ்ந்த திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. விலை மாதர் மயக்கத்தில் நான் விழலாமோ.

ஒப்புக:
1.இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்...
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம் --- திருப்புகழ், சினத்தவர்
தொண்டாகிய வென் னவிரோத ஞானச் சுடர்வாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே கந்தர் அலங்காரம்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே - கந்தர் அலங்காரம்.