115.அரகர சிவன்
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடு மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர முநிவோரும்
பரவி முனநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு பெருமாளே
-115 திருத்தணிகை
இது ஒரு துதிப் பாடல்.
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடு மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர முநிவோரும்
பரவி முனநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு பெருமாளே
-115 திருத்தணிகை
சுருக்க உரை
அரகர என்னும் சொல்லுக்கு உரிய சிவபெருமானும், திருமாலும், பிரமனும் போற்றி உன் முன்னிலையில் ஆறுமுகனே சரவணனே என்று நாள்தோறும் துதிக்க, அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செல்ல விட்ட சிறந்த வீரனே, சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடியை அடியார்கள் உள்ளத்தில் பொருந்த அருளும் முருகனே,மலைமகளாகிய பார்வதி அருளிய குகனே,
பரம சிவனின் இரண்டு செவிகளிலும் மகிழ்ச்சி கொள்ள பிரணவத்தின் முடிவுப் பொருளை அவருக்கு எடுத்துரைத்த குருபரனே, சிறப்பு பொருந்திய உலகோரும், தேவர்களும், முனிவர்களும் நாள்தோறும் மகிழும்படி தணிகையில் உறைபவனே, யாவராலும் புகழப்படும் வள்ளியும், கற்பக தருவின் நிழலில் வீற்றிருந்த தேவசேனையும் இரு பக்கங்களிலும் பொருந்த எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்
1.இரு செவி களி கூர....
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா ------- திருப்புகழ் , சிவனார்
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே ---- திருப்புகழ் , குசமாகி
2.. உலகம் மன் அலகில உயிர்களும்......
பக்குவப் படாத உயிர்களெலாம் தாங்கள் முருக வழிபாட்டில்
பக்குவப்பட்ட முனிவர்களை முந்திக் கொள்ளவில்லயே என்று நொந்து
கொண்டு முணு முணுத்தல். இக்கருத்தைத் திருவாசகத்திலும் காணலாம்.
அறுகு எடுப்பார் அயனும் அரியும்
அன்றி மற்று இந்திரனோடு அமரர்
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம்
நம்மில்பின்பு அல்லது எடுக்க ஓட்டோம்.ப் --- திருவாசகம் திருப்பொற்சுண்ணம்
3. பணிதிகழ் தணிகையில் உறைவோனே....
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிகைமலையி லுறைகின்ற பெருமாளே ---
திருப்புகழ்,முலைபுளக