114.அமைவுற்று
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
- 114 திருத்தணி
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
- 114 திருத்தணி
சுருக்க உரை
பசியுடன் வருபவர்க்கு ஒரு சிறிதளவேனும் அமுது படைக்க மனம் வராமல், எல்லா பொருள்களையும் சேகரித்து வைத்து, அருள் நெறியினின்றும் தவறிப் போய், ஆணவத்தால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் கதறி அழ, நமன் வெகு தூரம் கொண்டு போகின்ற உடலை நிலையானது என்று எண்ணி, அதற்காகப் பாடுபடுவது என் தலை விதியா?
பார்வதியைப் பக்கத்தில் வைத்துள்ள சிவபெருமானுக்கு அவர் உவக்க உபதேசம் செய்தவரே, போரில் எதிர்த்து வந்த சூரனைக் கழுகுக்கு இரையாகும்படி அழித்த வேலாயுதத்தை உடையவரே, மதப் போராட்டம் செய்பவர்கள் கூட்டத்தினின்று விலகி, உனது திருவடிகளை அடைய நான் விரும்புகின்ற ஆறு திரு முகங்களை உடையவரே, திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் நிலையில்லாத உடலை நிலை என்று நம்பித் தளர்வுறக் கடவேனோ?

ஒப்புக
சம நெட்டு உயிரைக் கொடு போகும் சரிரத்தினை நிற்கும்........
குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவ னூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
- கந்தர் அலங்காரம்