மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் மடமாதர்
இகழ வாச முற்ற தகையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த பெருமாளே
- 112 திருவேரகம்
மதுர நாணி யிட்டு நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் மடமாதர்
இகழ வாச முற்ற தகையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த பெருமாளே
- 112 திருவேரகம்
சுருக்க உரை
மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் தன் கரும்பு வில்லில் நாண் இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி, வளைத்த வில்லின் உள்ளே ஒளித்த அம்பு போன்ற கண்களை உடைய மாதர்கள் இகழும்படி,தலை முழுதும் வெளுத்து, இளமை கடந்து போய் மறைந்து விடும்படி,முடிவில்லாமல் நான் எடுத்த பிறவியின் வேரை அறுத்து, உனது,இனிய திருவடியைத் தருவதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ?
ஏழு உலகங்களின் மீதும், எட்டு கிரிகளின் மீதும் முட்டும்படி அதிர,செலுத்துகின்ற மயில் வீரனே. அசுரர்களின் சேனைகள் கெட்டு அழியவும், தேவர்கள் வாழவும் அருளிய இளையோனே. சடைப் பிரானாகிய சிவபெருமான் நின்று கேட்க, சுவாமி மலையில் வீற்றிருந்து உபதேசம் செய்தவனே. பிரணவப் பொருளை அடியார்களுக்கு அருள் செய்கின்ற சிவபெருமான் அறிய வேண்டிக் கேட்க அதை அவருக்கு உபதேசித்த பெருமாளே. உன் திருவடியை எனக்கு அளிப்பது ஒரு நாள் ஆகுமோ?

ஒப்புக
1. அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட...
மேரு அடியிட எண்டிசை தூள்பட்ட அத்தூளின் வாரி
திடர்ப்பட்டதே ... கந்தர் அலங்காரம்
2. மிக நிலா எறிந்த அமுத வேணி...
வெண் நிலா மிகுவிரி சடை அரவொடும். .. சம்பந்தர் தேவாரம்.
விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க...
சிவபெருமான் ஒரு க்ஷணநேரம் தியானத்தில் இருக்க, முருகவேள் அவருக்கு பிரணவப் பொருளைத் தணிகையில் உபதேசித்தார் என்றும், அதனால் தணிகைக்கு க்ஷணிகாசலம் எனப் பெயர் வந்தது. தணிகைப் புராணம்
ஏழு உலகங்கள்
ஏழு உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம்,ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம் என்பன.
எட்டு மலை
இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்