111.பாதிமதி
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
- 111 திருவேரகம்
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
- 111 திருவேரகம்
சுருக்க உரை
பிறை, கங்கை, பூக்கள் இவைகளை அணியும் சிவபெருமான் அருளிய குமரனே. சர்க்கரை, கனி ஆகியவற்றைப் போல் இனிக்கும் மொழியை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதங்களை வருடிய மணவாளனே. பிரிவு செய்யப் பட்ட ஒரு கண்ணைக் காகாசுரன் அடையும்படி அருளிய இராமனின் மருகனே. யமன் என்னை அணுகாமல்
இருக்கும்படி உன் இரண்டு திருவடிகளில் நான் வழிபடும் புத்தியைத் தருவாயாக.
பிரமனும் தேவர்களும் விண்ணுலகத்தை ஆளும் படி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, ஆடும் மயிலின் மேல் ஏறி வரும் இளையவனே. மா மரங்கள் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருப்பவனே. சூரனுடைய உடல் துணி படவும்,கடல் வற்றிப் போகவும் வேலைச் செலுத்திய பெருமாளே. யமன் என்னை அணுகாதபடி என்னை உனது காலில் வழிபடும்படி அருள் புரிவாயாக.

காதும் ஒரு விழி காகம் உற அருள்...
சீதையின் உடலைத் தன் உகிரினால் கொத்திய காகத்தின் மீது புல்லையே படை ஆக்கி இராமர் செலுத்தினார். அப்படைக்கு அஞ்சி காகம் சரண் அடைய, அவர் அதற்கு உயிர்ப் பிச்சை அளித்து, இரு கண்ணிற்கும் ஒரு கண்மணியே பொருந்த அருளினார். காகாசுரனாக வந்தவன் இந்திர குமாரன் சயந்தன் என்பார்.
ஒப்புக
பாகு கனி மொழி மாது குற மகள் – தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வவள்ளி
யமன் என்னை அணுகாமல் அருள்வாயே