110.நிறைமதி
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே
- 110 திருவேரகம்
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே
- 110 திருவேரகம்
சுருக்க உரை
சந்திரனைப் போன்ற முகத்தின் ஒளியாலும், வழி காட்டியான கண்என்னும் அம்புகள் செய்யும் போரினாலும், என்னிடம் உறவு கொள்ளுகின்ற விலை மாதர்களின் தொடர்பு எனக்கு நல்லதாகுமோ? (ஆகாது என்றபடி). உனது திருவடியை எனக்கு இனித் தந்தருளுக.
வேதங்களால் போற்றப்படும் திருமாலின் மருகனே, பகைவர்களாகிய அசுரர் குலத்துக்கு யமனைப் போன்றவனே, குறப் பெண்ணாகிய வள்ளியை மணந்து அருளியவனே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் திருவடியை எனக்குத் தருவாயாக.
திருவடி தாமைரையை தந்து என்னை ஆட்கொள்