109.நாவேறு
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைந்து
நாலாறு நாலு பற்று வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு னருள்கூர
நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ ணாவ னைச்சொ லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாழி பெற்ற பெருமாளே
-109 திருவேரகம்
[div5]கருத்து
முதன்மை சிவத்தின் மூலம் உலகிற்கு மதியும் கதியும் குறிப்பில் தோன்றச் செய்த குருநாதன் அல்லவா அசுர ஆட்சியை அழித்தவன் அல்லவா இதய குகையில் இருப்பவன் அல்லவா! உன் விஷயத்தில் உயிர்கட்கு வேட்கைகளை விளைவிக்கும் இச்சா சக்தியை மணந்தவன் அல்லவா சுவாமி மலை எனும் சாந்திநிகேதனைச் சார்ந்தவன் அல்லவா கோமலையான பராசக்தியின் குமாரன் அல்லவா அருள் மனத்தவன் அல்லவா!
நீயே பெரிய பொருள் ஆயிற்றே வேண்டுகிறேன் பிரபோ, கேள், உனது பா மணம் கமழும் பாதக கமலங்களையே தியானிக்க அருள். அருள் நூட்கள் உரைத்ததை அனுபவிக்க அருள். சிவோக பாவனை சிறக்க அருள். ஆதாரங்களுக்கு மேலான பராபரத்தை நீ காண் காண் என்று காட்டி அருள், பிரபோ, நீ காட்டினால் அன்றி அடியேன் காண முடியுமா ????? குமரா, குகா, காணுகாறு அடியேற்கு காட்டி அருள் என்று கதறிய படி[div5]

சுருக்க உரை
சிறந்த அடியார்களின் நாவில் ஊறிய பாடல்களின் மணம் வீசும் உன் திருவடித் தாமரைகளையே தியானித்து, இருபத்து எட்டு வகையானவையும், நான்கு பாதங்கள் பொருந்தினவையும் ஆகிய ஆகம நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியை நான் தினமும் அனுட்டிக்கவும், நீ வேறு, நான் வேறு என்ற பிரிவு இல்லாத ஒன்று பட்ட நிலையில் நான் வாழ, உன் திருவருளைத் தருவாயாக. ஆறு ஆதாரங்களின் மேற்பட்ட நிலையில் உள்ள பரம்பொருளை நீ காண்பாயாக என்ற அந்த ஐக்கிய நிலையை எனக்கு உபதேசித்து அருளுக.
இடபம் மீது ஏறும் சிவபெருமான் உன்னை வலம் வர அவருக்கு ஞான உபதேசம் செய்த குரு நாதா, சூரர்கள் இறக்கும்படி வெட்டிய தீரனே, குகனே, குறத்தி மணவாளா, காவேரியின் வர கரையில் உள்ள சோலைகள் சூழ்ந்த சுவாமி மலையில் வீற்றிருப்பவனே, கறு நிறம் கொண்ட காளி, வாலை, சத்தி, காமனை எரித்தவள் ஆகிய உமா தேவியின் முருகனே, பரம் பொருளை நான் காணும்படி உபதேசம் செய்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்
அ. ஷடாதரத்தின் மீதே பரபரத்தை...
இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு.
நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் பூரகம் என்றும், வெளிவிடும் காற்றுக்கு இரேசகம் என்றும் பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ஆதாரங்கள் (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி மேல் நோக்கிச் சென்று, தலையில் பிரம கபாலத்தில் உள்ள ஸஹஸ்ராரம் (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங் களுக்கும் ஊட்டப்பட்டுத், திரும்ப அதே வழியில் மூலாதாரத்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஓழுங்கு படுத்தும் வகையில் மூன்று மண்டலங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து நாடிகளும் (இடைக்கலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.
சுவாச நடப்பை யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். இந்த
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும் போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள்,கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மூலாதாரம்...இடம் (இ) = மூலம் (குதம்). பூதம் (பூ) = மண். மலர் வடிவம் =
குண்டலி வட்டம், அதன் உள்ளே முக்கோணம். நான்கு இதழ் கமலம். அக்ஷரக் குறிப்பு
(கு) = ஓங்காரம். தலம் (த) = திருவாரூர். கடவுள் (க) = விநாயகர்.
2. சுவாதிட்டானம்...(இ) = கொப்பூழ். (பூ) = அக்கினி. மலர் வடிவம் = நாற் சதுரம்,
அதன் மத்தியில் லிங்க பீடம். ஆறு இதழ் கலமம். (கு) = நகரம். (த) =
திருவானைக்கா. (க) = பிரமன்.
3. மணிபூரகம்...(இ) = மேல் வயிறு. (பூ) = நீர். மலர் வடிவம் = பத்து இதழ் கமலம்.
பெட்டியில் பாம்பு. நடுவில் வட்டம். (கு) = மகரம். (த) = அண்ணாமலை. (க) =
திருமால்.