108.நாசர்தம்
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமேவி
மாமணங் கமழுமிரு கலமபா தத்தை நின்று பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கிரங்கு மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே
- 108 திருவேரகம்

சுருக்க உரை
கேடு செய்யும் கீழோரான விலைமாதர்கள் வசிக்கும் இடங்களுக்குச்
சென்று, அவர்களுடன் கலவி இன்பம் அனுபவித்து, தடுமாறி, அறிவு கெட்டு, தவறான வழியில் சென்று, தீ நெறியில் அழுந்த நான் மெலிவு உறாமல், உலகமெல்லாம் உனது புகழில் ஒரு சொல் அளவாவது எனக்குக் கூறினால், நான் நற்கதி அடைந்து, உன் திருவடித் தாமரைகளை மனம் ஒடுங்கி நின்று பணிய மாட்டேனா?
சிவபெருமான் மெச்சும்படி அவருக்கு உபதேசம் செய்த குரு மூர்த்தியே. இந்திரன் போற்றி வளர்த்த தேவசேனைக்குக் கணவனே, பல வகையான மரங்கள் சூழ்ந்த சுவாமி மலையில் யோக நிலையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் திருவடிகளில் நின்று பணிய மாட்டேனா?

ஒப்புக:
1 1. தெய்வயானைக்கு இரங்கு மணவாளா...
நவ மா மணி வடமும் பூத்த
தன மாது எனும் இபமின் சேர்க்கை
நழுவா வகை பிரியம் காட்டு முருகோனே .. .திருப்புகழ்,முகிலாமெனு
2.. மாசகம் தொழும் உனது புகழில் ஓர் சொல்...
நவ லோகமும் கை தொழும் நிசதேவ அலங்கிருத
நலமான விஞ்சை கருவிளை கோவே.
..திருப்புகழ்,சிவனார்மனம்