107 தெருவினில்
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ் சலித்தும் விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் பெருமாளே.
-107 திருவேரகம்
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ் சலித்தும் விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் பெருமாளே.
-107 திருவேரகம்
சுருக்க உரை
தெருவில் நடக்கும் மாதர்கள் ஒன்று கூடிப் பேசும் பழிப்புச் சொற்களாலும், சூரியன் என்னும்படி சிவந்து உதிக்கும் சந்திரனாலும்,சண்டை செய்ய வல்ல வில்லை வளைத்து மன்மதன் செலுத்தும் மலர்ப் பாணங்களாலும், புளகாங்கிதம் கொண்ட கொங்கைகளை உடைய இந்தப் பெண் மனச் சோர்வு அடையலாமோ?
ஒப்பற்ற கிரௌஞ்ச மலை இரு பிளவாகும்படி வேலைச் செலுத்தியவனே, சுவாமி மலையில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகோனே, அரிய வேதங்களைத் தமிழ் முறையில் சம்பந்தராக வந்து உணர்ந்து, தேவாரப் பாடல்களாக உரைத்த புலவனே, இந்திரன்,திருமால், பிரமன் ஆகியோரின் கால் விலங்கை அவிழ்க்க உதவிய பெருமாளே, இந்தப் பெண் காம நோயால் வாடி மனம் சலித்து விடாலாமோ?
இப் பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது (தலைவன், தலைவி பாவம்).

அருமறை தமிழ்நூலடைவே...
இது இருக்க வேத சாரமாக முருகவேளின் கூறான சம்பந்தர் அருளிய தேவாரப் பாக்களைக் குறிக்கும்.
தென்னூல் சிவபத்தி
ருக்கு ஐயம் போக உரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே) ...கந்தர் அந்தாதி
வேல், சுவாமிமலை, வேதம், சம்பந்தர், திருமால் பிரமன் ஏரகம்
ஞானசம்பந்தர்
திருஞான சம்பந்தர் சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகபிப் பிறந்தார். 3-ம் ஆண்டில் உமையம்மையாரின் ஞனப்பால் உண்டு, பதிகள்தோறும் தோறும் சென்று பதிகம்பாடி, சைவ எழுச்சியூட்டி, திருமண நல்லூரில் திருமண நாளன்று மணமகளோடு கோவிலினுள்சென்று இறைவனுடன் கலந்தவர்.
இவர் திருநாவுக்கரசரரின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர். திருநீல கண்ட யாழ்ப்பாணர் இவரோடுசென்று இவருடை பாடல்களை எல்லாம் யாழ் இசைத்தார். ஒரு முறையாவது யாழாலும் இசைக்ககமுடியாத பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினார். இதை உணர்ந்த திரு நீலகண்ட யாழ்பாணர்தனது யாழை முறிக்க முயன்ற போது இதைக் கண்ட சம்பந்தர் அதைத் தடுத்து யாழ்ப்பாணருக்குஆறுதல் மொழி கூறினாராம். அன்றில் இருந்து இதை யாழ்முறிப்பண் என்பார்களாம். ஆனால்தற்சமயம் சிலர் “நீலாம்பரி" என்பர், சிலர் “அடாணா" என்பர்.
சம்பந்தர் 16.000 பாடல்களைப் பாடினதாக வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று நமக்கு கிடைதிருப்பதோ 4181 பாடல்களே..
இவை இனிய ஓசைகளுடன் கூடிய இசைப்பாக்கள் ஆகும். யமகம். திரிபு, மொழிமாற்று, அடிமாற்றுஎனச் சொல்லணிகள் இப்பாக்களில் கையாளப்பட்டுள்ளன. சிவபெருமானின் உருவ அழகிலும்,திருக்குணங்களிலும் ஈடுபட்டுத் தலைவி நிலையில் நின்று பாடிய பாக்கள் பலவகை. எல்லாப்பாக்களும் இனிய, எளிய சொல்லால் இன்னோசை ததும்பும் வண்ணம் அமைந்துள்ளன. சோழநாட்டில் சைவசமையத்தை உறுதி பெறச்செய்து பாண்டிய நாட்டை சமணர் படியில் இருந்து மீட்டபெருமையும் சப்பந்தரையே சாரும். திருமுருகனின் அவதாரம் என்று அருணகிரி சுவாமிகள் பல இடங்களில் கூறியிருக்கிறார்.
பதிகம் தோறும் சிவன் இராவணன் செருக்கை அடங்கியதையும், சிவனுக்கு மாலும் அயனும்தாழ்ந்ததையும் கூறுவதோடு, சமணக் கொள்கைகளையும் சாடுகின்றார். பதிய இறுதியில் தன்பெயரை இணைத்துப்பாடி புதுமுறையினைப் புகுத்தியுள்ளார்.