105.சுத்தியநரப்புடன்
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் சங்குமூளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக வங்கமூடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் பஞ்சபூதம்
எத்தனைகு லுக்ககையுமி னுக்கையும னக்கவலை
யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள மண்டியோடச்
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
கைத்தலம்வி ரித்தரஹு ரச்சிவபி ழைத்தொமென
சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமெ பக்குவிட வென்றவேலா
சித்தமதி லெத்தனைசெ கத்தலமவி தித்துடன
ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட னங்கொள்வேளே
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் தம்பிரானே.
- 105 திருவேரகம்

சுருக்க உரை
நரம்பு, எலும்பு, ஊன், குடல், நீர், சளி, இழுப்பு நோய், இருதயம், இந்திரியம்,புழுக்கள், அழுக்குகள், மயிர், மூளை, மற்றும் பல நோய்கள் மிகுந்துள்ள உடலில் தான் எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், வெறுப்புகள்,பொலிவுகள், நோய்கள்? ஐந்து பூதங்களால் ஆகிய இந்தக் குடிலில் எத்தனை குலுக்கு, மினுக்கு, நடவடிக்கை, பிறவிகள், இறப்புகள்? இவைகளை நான் மீண்டும் மீண்டும் எடுத்து நான் உலகில் வாட்டமுற்று அழிவேனோ?
பேரொலியுடன் பல வாத்தியங்கள் முழங்குவதை ஒத்து ஓடும் அசுரர்களின் இரத்தம் நிரம்பி ஓட, ஆதிசேடன் நௌiய, தேவர்கள் அரகர என்று கைகளைத் தூக்கி முழங்க, சக்ரவாள கிரி பிளவுபட, வென்ற வேலா. நினைத்த மாத்திரத்தில் எத்தனை உலகங்களைப் படைக்கவும், உடனே அழிக்கவும் வல்லவனே. பிரமனது குடுமியைப் பிடித்துக் குட்டி நடனம் புரிபவனே. செட்டி வேடம் பூண்டு வள்ளியுடன் மகிழும் பெருமாளே. சிவபெருமானுக்குக் குரு மூர்த்தியாக நின்று புகழ் பெற்ற தம்பிரானே.
நான் பிறப்பையும், இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ?

ஒப்புக
1.சித்தமதி லெத்தனை செகத்தலம் விதத்துடன்.....
பிரமனைச் சிறையிலிட்டு முருகவேள் தாமே படைப்புத் தொழிலை நடத்தினர். கந்தமால் வரைதனில் ஏகிப் பல்லுயிர்த் தொகை படைப்பது
நினைத்தனன் பரிவால்....ஆதியாய் வைகிய செவ்வேளா அயனெனப்
படைக்கின்றதும் அற்புதம் ஆமோ ... கந்த புராணம்
2.செட்டி வடிவைக் கொடு தினைப் புனத்திற் சிறுகுறப் பெண்.....
காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை பட்டனை செல்வ
ஆரூரானை மறக்கலும் ஆமோ ..
சுந்தரர் தேவாரம்