104.சரணகமலாலயத்தை
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே.
- 104 திருவேரகம்
உதவி புரிய வேணும்

சுருக்க உரை
தாமரை போன்ற திருவடிக் கோயிலை அரை நிமிஷ மட்டிலாவது மனம் ஒடுங்கித் தியானம் செய்வதற்கு அறியாத மிக முட்டாளாகிய அடியவனாகிய நான், பிறவி எடுத்தலையே தொழிலாகக் கொண்டு,வறுமையால் மயக்கம் உறுவேனோ? என் மீது கருணை காட்டாமல் இருக்க என்ன காரணம்? இப்போதே சொல்லி அருளுக.
கயிலை மலையில் வாழும் சிவ பெருமானின் மகனே. உனது திருப் புயங்களில் இரத்தின, பொன் மாலைகளையும் கடப்ப மாலையையும் அணிபவனே, இதுவே தக்க சமயம். எல்லா விதமான சுகங்களையும், சிவ ஞானம், முத்தி இவைகளையும் எனக்குக் கொடுத்து உதவி செய்ய வேண்டும். கூரிய வேலை ஏந்தியவனே, உன் திருப்பாதங்களைத் துதிக்க அருமையான தமிழைத் தந்த மயில் வீரனே, அதிசயங்கள் பல நிகழ்ந்த பழனி மலையில் வீற்றிருக்கும் திருவேரகத்து முருகனே, பர கதி கொடுத்து எனக்கு உதவி செய்ய வேண்டும்.

Comment